Home /News /national /

எட்டு முகபாவனைகள், அழகிய கதைசொல்லல்- பார்வையாளர்களைக் கவர்ந்த ராதிகா மெர்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்

எட்டு முகபாவனைகள், அழகிய கதைசொல்லல்- பார்வையாளர்களைக் கவர்ந்த ராதிகா மெர்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ராதிகா மெர்சென்ட்

ராதிகா மெர்சென்ட்

Radhika Merchant Bharathanatyam Arangetram | மும்பையில் நடைபெற்ற ராதிகா மெர்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

    மும்பை நகரம் பொதுவாக துடிப்பான கலாச்சார காட்சிகளைக் கொண்டிருக்கும். ஆனால், கடந்த சில மாதங்களாக அப்படியான சூழல் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது பரதநாட்டிய அரங்கேற்றத்தின் மூலம் மீண்டும் அது எல்லாருடைய பேசுபொருளாகியுள்ளது. முகேஷ் அம்பானி, நிடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவியான ராதிகா மெர்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்தான் அது.

    ஜியோ உலக சென்டரிலுள்ள க்ராண்ட் திரையரங்கில் நடைபெற்ற ராதிகாவின் முதல் தனி பரதநாட்டிய நடனத்தைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர். அம்பானி குடும்பத்தினர் மற்றும் மெர்சென்ட்டின் குடும்பத்தினர் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். அதனால், பொதுச் சேவை, தொழிற்துறை, பொழுதுபோக்குத்துறையைச் சேர்ந்த நண்பர்களும் அங்கு வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெரும்பாலான விருந்தினர்கள் பட்டுச் சேலைகள், ஷெர்வானி, குர்தா போன்ற பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.

    அம்பானி குடும்பத்தினரும், மெர்சென்ட் குடும்பத்தினரும் சேர்ந்து ஒவ்வொரு விருந்தினரையும் சிறப்பாக வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. எல்லாருடைய பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் மீதிருந்த அக்கறையின் காரணமாக அனைத்து பிரபலங்களும் இந்த பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற ஒப்புக்கொண்டனர்.

    இது ராதிகா மற்றும் அவருக்கு 8 ஆண்டுகள் நடனம் கற்றுக்கொண்ட குருவான பாவனா தாகரின் வெற்றிக்கான நேரமாக இருந்தது. ராதிகாவின் முதல் அரங்கேற்றம், உலகின் பழமையான பாரம்பரியமான கலைக்கு ஒரு புதிய கலைஞரைக் கொண்டுவந்து கொடுத்துள்ளது. நீடா அம்பானிக்குப் பிறகு அம்பானியின் குடும்பத்தில் இரண்டாவது பரதநாட்டியக் கலைஞராகிறார் ராதிகா.

    ராதிகாவின் நடனம், அரங்கேற்றத்திலுள்ள பாரம்பரிய அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி மேடையிலுள்ள கடவுள்கள், குரு மற்றும் பார்வையாளர்களின் ஆசிர்வாதங்களை வணங்கிக் கேட்டுக்கொண்டார். உடனடியாக அதன் தொடர்ச்சியாக கணேஷ் வந்தனா மற்றும் பாரம்பிய அலாரிபு நடனத்தை செய்தார்.


    ராகாமாலிகா இசைக்கு அச்யுதம் கேசவத்தையும், ராமரின் ஏக்கமான ஷாப்ரி, கிருஷ்ணரின் நடனம், மற்றும் யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணர் ஆகிய மூன்று கதைகளைச் சொன்னார். வலிமையான நடராஜரின் அழிவில்லா நடனத்தை விளக்க சிவா பஞ்சாக்ஷ்ராவை நடனமாக்கினார். அதன்பின்னர், அஷ்டரசா என்று அழைக்கப்படும் அடிப்படையான எட்டு மனித உணர்களை நாட்டியக் கலைகள் மூலம் விளக்கினார். அதில், அன்பு, சிரிப்பு கருணை, பயம், வீரம், கோபம், வெறுப்பு, ஆச்சர்யம் ஆகிய பாவணைகளை வெளிப்படுத்தினார். நடனத்துடன் சேர்ந்த முகபாவனைகள் மூலம் பார்வையாளர்களை ராதிகா ஆச்சர்யப்படுத்தினார்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி