என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சி.இ.ஓ விரென் மெர்சென்ட், சாய்லா மெர்சென்ட்டின் மகளான பரதநாட்டிய கலைஞர் ராதிகா மெர்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று நடைபெறவுள்ளது. இந்தநிகழ்ச்சியில் ராதிகாவின் வருங்கால மாமனாரும், மாமியாருமான முகேஷ் அம்பானி, நிடா அம்பானி கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தியாவின் தொன்மையான பாரம்பரிய கலைகளுள் ஒன்றான பரதநாட்டிய நடனத்தை முறைப்படி பயின்றவர்கள், முதன்முறையாக சான்றார்கள் முன்னிலையில் மேடையேறி நடனமாடுதலை அரங்கேற்றம் என்று அழைப்பார்கள். இது பரதநாட்டியத்தை பயலும் மாணவர்களின் பட்டம் பெறுதல் போன்று கருதப்படுகிறது.
மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸிலுள்ள ஜியோ உலக சென்டரிலுள்ள க்ராண்ட் தியேட்டரில் இன்று மாலை 6 மணிக்கு ராதிகா மெர்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அம்பானி குடும்பத்தினரும், மெர்சென்ட் குடும்பத்தினரும் அழைப்புவிடுத்துள்ளனர். இந்த பரதநாட்டிய நிகழ்வுக்குப் பிறகு லோட்டஸ் பால்ரூமில் இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராதிகா மெர்சென்ட், ஸ்ரீ நிபா ஆர்ட்ஸைச் சேர்ந்த குரு பாவனா தாகரின் மாணவியாவார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.