பான் கார்டு விண்ணப்பம்: புதிய நடைமுறை அறிமுகம்!

பான் கார்டில் தங்களது தந்தையின் பெயரை தெரிவிக்க விரும்பாத பலர் இதுதொடர்பாக வருமான வரித் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

news18
Updated: November 21, 2018, 10:27 PM IST
பான் கார்டு விண்ணப்பம்: புதிய நடைமுறை அறிமுகம்!
மாதிரி பான் கார்டு
news18
Updated: November 21, 2018, 10:27 PM IST
பான் கார்டுக்கான விண்ணப்பப் படிவத்தில், தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமானவரிக் கணக்கு தாக்கல் மட்டுமல்லாது, வங்கி பரிவர்த்தனைகள் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு அவசியமாக தேவைபடுகிறது. பான் கார்டு பெறுவதற்கான விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board Of Direct Taxation) விடுத்துள்ள அறிவிக்கையில், `பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், தந்தை இல்லாமல் தாயால் மட்டுமே வளர்க்கப்படுபவர் என்றால், அவர் தனது தாயின் பெயரை மட்டும் விண்ணப்பத்தில் குறிப்பிடலாம். தந்தையின் பெயரை தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. இந்த புதிய விதி டிசம்பர் 5-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் பெண்களின் உரிமைகளை காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மேற்கண்ட முடிவு கருதப்படுகிறது. முன்னதாக, பான் கார்டில் தங்களது தந்தையின் பெயரை தெரிவிக்க விரும்பாத பலர் இதுதொடர்பாக வருமான வரித் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

தந்தையால் கைவிடப்பட்டு தாயால் மட்டுமே வளர்க்கப்படும் தங்களுக்கு தாயின் பெயரை மட்டும் பதிவு செய்துகொள்ள உரிமை வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

Also watch

First published: November 21, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...