உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. |

news18
Updated: January 9, 2019, 10:56 PM IST
உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. |
news18
Updated: January 9, 2019, 10:56 PM IST
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 149 உறுப்பினர்களின் ஆதரவுடன் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அதிமுக, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை


இதன்படி ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் அல்லது 5 ஹெக்டேருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும். 1000 சதுர அடிக்கு கீழ் சொந்த வீடு உள்ளவர்களுக்கும், நகராட்சிப் பகுதிகளில் 900 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை உள்ளவர்களுக்கும், நகராட்சி அல்லாத பகுதிகளில் 1800 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை உள்ளவர்களும் இச்சலுகையைப் பெறலாம்.
First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...