குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை வித்திடும் அமைப்பாக குவாட் உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜப்பான் முன்னாள் பிரதமர் Shinzo Abe மூலம் 2007ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் வீழ்ச்சி அடைந்த இந்த அமைப்பு 2017ம் ஆண்டு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அமைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுவதும் உண்டு.
இந்நிலையில், குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் ஜப்பான் சென்றுள்ளனர். இந்தோ-பசிபிக் பிராந்திய வளத்துக்கான பொருளாதார கட்டமைப்பு (ஐ.பி.இ.எப்.) தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, ஜோ பைடனை சந்தித்து பேசினார்.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, 'ஐ.பி. இ.எப் உருவாக்கம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் எந்திரமாக மாற்றுவதற்கான ஒரு கூட்டு விருப்பத்தின் பிரகடனமாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கான பொதுவான மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய வேண்டும்’ என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தீவிரமடையும் மங்கிபாக்ஸ் - படுக்கைகளை தயார் செய்து உஷார் நிலையில் மும்பை
குவாட் உச்சி மாநாட்டில் பேசிய மோடி, ’நல்லவற்றுக்கான சக்தியாக’ குவாட் அமைப்பு உருவெடுத்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். குவாட் மிகக் குறுகிய காலத்தில் உலகின் முன் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இன்று, நோக்கம் விரிவானதாகிவிட்டது, அதன் வடிவம் பயனுள்ளதாக உள்ளது. குவாட் மட்டத்தில், எங்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன், சுதந்திர, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ பசிபிக் பிராந்தியம் ஊக்குவிக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.