• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • QS World University Ranking 2022: உலகின் சிறந்த 400 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்த 8 இந்திய பல்கலை எவை?

QS World University Ranking 2022: உலகின் சிறந்த 400 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்த 8 இந்திய பல்கலை எவை?

 IISc பெங்களூரு

IISc பெங்களூரு

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-க்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

  • Share this:
பல்வேறு தரவுகளின் அடிப்படையில் வருடந்தோறும் பல்கலைக்கழங்கள் குறித்த தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது Quacquarelli Symonds (QS). இந்த வருடத்திற்கான 400 பல்கலைக்கழகங்கள் அடங்கிய பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவின் MIT பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ள நிலையில், இந்த பட்டியலில் 8 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் மொத்தம் 1300 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசைக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கல்வி மதிப்பீடு, ஊழியர்கள் மதிப்பீடு, பேராசிரியர்/மாணவர் விகிதம், ஆராய்ச்சி வெளியீடுகள், சர்வதேச பேராசிரியர்கள் விகிதம், சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்ற 6 அளவுருக்களின் அடிப்படையில் இந்த தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

QS Global University Ranking : டாப் 10 பட்டியல்..

பல்கலைக்கழங்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்திருக்கும் பல்கலைக்கழகங்கள்..

  1. Massachusetts Institute of Technology (MIT), US

  2.  University of Oxford, UK

  3.  Stanford University, US

  4.  University of Cambridge, UK

  5. Harvard University, US

  6. California Institute of Technology (Caltech), US

  7. Imperial College London, UK

  8. Swiss Federal Institute of Technology

  9.  UCL, UK

  10.  University of Chicago, US


Also Read:   PF New Rule: புதிய PF விதி அமல்: இதை செய்யலனா இந்த மாதத்தில் இருந்து உங்கள் கணக்குக்கு பணம் வராது!

400 பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ள இப்பட்டியலில் அமெரிக்காவிலிருந்து அதிகபட்சமாக 177 பல்கலை இடம்பெற்றுள்ளன. இதில் 17 பல்கலைக்கழகங்கள் புதியவை ஆகும். இந்தியர்களின் சிறந்த கல்வி சரணாலயமான கனடாவில் 28 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சிறந்த பல்கலைக்கழகமாக டொரோண்டோ பல்கலைக்கழகம் உள்ளது. இப்பலைக்கழகம் சர்வதேச அளவில் 26வது இடத்தை பிடித்திருக்கிறது.

400 சிறந்த பல்கலைக்கழகங்கள் அடங்கிய பட்டியலில் இந்தியாவிலிருந்து 8 பல்கலைக்கழகங்களே இடம்பெற்றுள்ளன.

Also Read:   இந்த பழைய 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா? ஆயிரக்கணக்கில் சம்பாதிங்க!

இதில் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி பாம்பே விளங்குகிறது. ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்திற்கு இப்பட்டியலில் 177வது இடம் கிடைத்திருக்கிறது.

இது தவிர ஐஐடி டெல்லி (185), ஐஐஎஸ்சி பெங்களூரு (186), ஐஐடி மெட்ராஸ் (255), ஐஐடி கான்பூர் (277), ஐஐடி கோரக்பூர் (280), ஐஐடி கவுகாத்தி (395), ஐஐடி ரூர்கி (400) போன்ற இந்திய கல்வி நிறுவனங்களும் முதல் 400 இடங்களுக்குள் வந்துள்ளன.

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-க்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக பல்கலைக்கழகங்களிலேயே சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் வரிசையில் IISc பெங்களூரு முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இக்கல்வி நிறுவனம் 100/100 மதிப்பெண்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய மண்டலத்தில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) இந்தப் பட்டியலில் 11வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. தெற்காசிய நாடுகளிலேயே சிறந்த 400 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அதிக இடங்களை பிடித்து மலேசியா (22) அசத்தியிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் இந்தோனேசியா (16) உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: