முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீரில் இன்று முதல் 2 ஜி சேவை - விரைவில் முழுவதும் சீராகும் என்று தலைமைச் செயலாளர் தகவல்

காஷ்மீரில் இன்று முதல் 2 ஜி சேவை - விரைவில் முழுவதும் சீராகும் என்று தலைமைச் செயலாளர் தகவல்

மாநில தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம்

மாநில தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம்

காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கூறினார்.

  • Last Updated :

காஷ்மீர் மாநிலத்தில் தொலைத்தொடர்பு சேவை உள்ளிட்டவை படிப்படியாக சீர்செய்யப்படும் என்று மாநில தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை முதல் செயல்படுவதாக தெரிவித்தார்.

பள்ளிகள் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்றும், தொலைபேசி சேவைகள் நேற்றிரவு முதல் படிப்படியாக வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கூறினார்.

காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தோய்பா போன்ற அமைப்புகள் தீவிர முயற்சி மேற்கொண்டபோதும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 12-ல் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், 5 மாவட்டங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

உதம்பூர், ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 2ஜி சேவை தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Also see...

top videos

    First published:

    Tags: Article 370, Kashmir, Telecommunications