• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பத்ம பூஷன் விருது பெற்றார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து: நடிகை கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருது!

பத்ம பூஷன் விருது பெற்றார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து: நடிகை கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருது!

பிவி சிந்து

பிவி சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரும், டோக்கிய ஒலிம்பிக் போட்டியில் வெங்கலப் பதக்கம் வென்றவரும் இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையுமான பி.சி.சிந்துவுக்கு பத்ப பூஷன் விருது வழங்கப்பட்டது.

  • Share this:
    பேட்மிண்டன் வீராங்கனை பி.சி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம பூஷன் விருதை வழங்கினார். நடிகை கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    அரசியல், கலை, இலக்கியம், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்  141 பேருக்கு அறிவிக்கப்பட்டன.  7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 16 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

    இவர்களுக்கு பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சியில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  பங்கேற்று விருதுகளை வழங்கினார்.  துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

    மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோருக்கு பத்ப விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பாக குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரும், டோக்கிய ஒலிம்பிக் போட்டியில் வெங்கலப் பதக்கம் வென்றவரும் இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையுமான பி.சி.சிந்துவுக்கு பத்ப பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: மண்ணில் கலைவண்ணம்.. புதுச்சேரி மண்பாண்ட கலைஞர் முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது.!


    இதேபோல் நடிகை கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பண்டிட் சன்னுலால் மிஸ்ரா,புதுச்சேரியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர்  முனுசாமி, ஏர் மார்ஷல் டாக்டர் பத்மா பந்தோபாத்யாய்  உள்ளிட்ட பலருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: