• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • PV Sindhu | ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து சாதனை வெற்றி: பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து!

PV Sindhu | ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து சாதனை வெற்றி: பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து!

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

  • Share this:
டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய பெண் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்துள்ள பி.வி.சிந்துவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பி.வி.சிந்து தோல்வியில் இருந்து எழுச்சியுடன் மீண்டு வந்து 3வது இடத்துக்கான போட்டியில் சீன வீராங்கனையை எதிர்த்து ஆக்ரோஷமாக ஆடி வெற்றி பெற்று இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று தந்துள்ளார்.

சீன வீராங்கனையான He Bingjiao-வை 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் பி.வி.சிந்து.

பி.வி.சிந்து கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த நிலையில் டோக்யோவில் வெண்கலம் வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறார்.

பி.வி.சிந்துவுக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ஆகியோர் சிந்துவை வாழ்த்தியுள்ளனர்.



குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், பிவி சிந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி ஆகியிருக்கிறார். அவர் நிலைத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.



பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பி.வி.சிந்துவின் அபாரமான செயல்பாட்டினால் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். டோக்யோவில் வென்கலம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் எங்கள் மிகச்சிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர் என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: