Home /News /national /

ராகுல் காந்திக்கு ரூ. 50 லட்ச சொத்தை எழுதிக் கொடுத்த மூதாட்டி.. நெகிழ வைக்கும் காரணம்

ராகுல் காந்திக்கு ரூ. 50 லட்ச சொத்தை எழுதிக் கொடுத்த மூதாட்டி.. நெகிழ வைக்கும் காரணம்

சொத்து தொடர்பான ஆவணத்தை காங். நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் மூதாட்டி புஷ்பா முஞ்சால்

சொத்து தொடர்பான ஆவணத்தை காங். நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் மூதாட்டி புஷ்பா முஞ்சால்

Rahul Gandhi | இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர்.

    ராகுல் காந்திக்கு மூதாட்டி ஒருவர் தனது சொத்தை எழுதிக் கொடுத்துள்ளார். இதனை ராகுல் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

    உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் புஷ்பா முஞ்சால். 78 வயதாகும் இவர் தனக்கு இருக்கும் சொத்துக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதி வைப்பதாக கூறி, அது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் உயிலை எழுதியுள்ளார். இந்த சொத்து உயிலை ராகுல் காந்தி சார்பாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் லால் சந்த் சர்மா உள்ளிட்ட உத்தராகண்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.



    இதுகுறித்து கூறியுள்ளா புஷ்பா முஞ்சால், 'இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். நாட்டிற்காக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். இந்த சம்பவங்கள் அவர்கள் மீது எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது' என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க - கையில் சகோதரன் உடன் பாடம் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி - மணிப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்
    உத்தராகண்ட் காங்கிரசின் முன்னாள் தலைவர் பிரிதம் சிங் இல்லத்தில் புஷ்பா முஞ்சால் தனது சொத்துக்களை ராகுல் காந்திக்காக ஒப்படைத்தார். புஷ்பாவுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொத்துக்களும், சுமார் 120 கிராம் தங்கமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Congress

    அடுத்த செய்தி