Home /News /national /

பாதுகாப்பை திரும்ப பெற்ற அரசு.. பிரபல பாடகர் சித்து மூஸ்வலா சுட்டுக்கொலை!

பாதுகாப்பை திரும்ப பெற்ற அரசு.. பிரபல பாடகர் சித்து மூஸ்வலா சுட்டுக்கொலை!

பாதுகாப்பை திரும்ப பெற்ற அரசு.. பிரபல பாடகர் சித்து மூஸ்வலா சுட்டுக்கொலை!

பாதுகாப்பை திரும்ப பெற்ற அரசு.. பிரபல பாடகர் சித்து மூஸ்வலா சுட்டுக்கொலை!

பஞ்சாப் அரசு நேற்று பாதுகாப்பை திரும்பப் பெற்ற நிலையில், இன்று பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வலா மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுடெல்லி, பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். மன்சா மாவட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியால் சுட்டதில் சித்து மூஸ்வாலா உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

    சித்து மூஸ்வாலா தனது இரண்டு நண்பர்களுடன் தனது கிராமத்திற்கு செல்லும் வழியில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது. கொலை நடந்த இடத்தில் மூஸ்வாலா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவர் சென்ற கார் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் சிதறி கிடந்துள்ளது. காயமடைந்த அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக பல்வேறு அசத்தலான பாடலை வழங்கி பஞ்சாப் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்து மூஸ்வாலா (28), இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து, 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் அவர் மானசா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். எனினும், ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் சிங்கலாவிடம் அவர் தோல்வியை தழுவினார்.

    இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சரண் சிங் சப்ரா, சித்து மூஸ்வாலாவுக்கு எதன் அடிப்படையில் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது என்பதை மாநில அரசும், முதல்வரும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நேற்று மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெற்று நடவடிக்கை எடுத்தது. விஐபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் போக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான் விஐபி பாதுகாப்பை திரும்ப பெற்றார். இதற்கு மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Punjab

    அடுத்த செய்தி