ரொட்டி இயந்திரம், வாஷிங்மெஷின்.. டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் 'பஞ்சாபி ஜுகாத்' வரவழைப்பு..

ரொட்டி இயந்திரம், வாஷிங்மெஷின்.. டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் 'பஞ்சாபி ஜுகாத்' வரவழைப்பு..

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் 'பஞ்சாபி ஜுகாத்' வரவழைப்பு

டெல்லியில் நடக்கும் போராட்ட இடங்களில் கால்-மசாஜ்கள் (foot-massagers), "பீஸ்ஸா லங்கர்" ("pizza langar") மற்றும் "சலோன் சேவா" ("Salon Sewa") போன்றவைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன என்பது கூறிப்பிடத்தக்கது.

 • Share this:
  டெல்லியில் கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பு தற்போது அதிகரித்திருக்கும் நிலையில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரை நோக்கி ’டெல்லி சலோ’ (Delhi Chalo) போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள். கொரோனாவைவிட மோசமான பாதிப்புகளை இந்தச் சட்டங்கள் ஏற்படுத்தும் என்பதே போராடும் விவசாயிகளின் அச்சம். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, வேளாண் துறையில் 3 புதிய சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. 

  3 புதிய வேளாண் சட்டத்திருத்தங்கள் :  

  * அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020

  * வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020 (ஊக்குவிப்பு மற்றும் வசதி)  

  * விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு)  

  இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாட்களாக நடந்து வரும் போராட்ட களத்தில் அவ்வப்போது புதுமைகள் நிகழ தவறுவதில்லை. அந்த வகையில், ஆட்டோமேட்டிக் "ரொட்டி" மெஷின்கள், ஹைடெக் சோலார் பேனல்கள் மற்றும் வாஷிங் மெஷின்கள் என பல்வேறு வசதிகளும் சிங்கு எல்லையில் (Singhu border) நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் இடம்பெற்றுள்ளது,

  இவைகள் ஏற்கனவே பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இப்போது "பஞ்சாபில் தயாரிக்கப்பட்ட" ("Made in Punjab") இன்ஸ்டன்ட் வாட்டர் கீசர்களும் (instant water geysers) வரவழைக்கப்பட்டுள்ளன.  அந்த வாட்டர் கீசரில், விறகை எரிக்க நடுவில் ஒரு துளை கொண்ட புதுமையான வடிவமைப்புடனும், சாதாரண தண்ணீரை வைக்க ஒரு புறத்தில் ஒரு புனல் போன்ற வாய்ப்புறத்தினையும், மறுபுறம் சூடான நீர் வெளியே வர ஒரு குழாயையும் கொண்டுள்ளது.

  இதுகுறித்து விளக்கிய 52 வயதான மஞ்சீந்தர் சிங், "இது பஞ்சாபி ஜுகாத் (This is Punjabi jugaad). நாங்கள் இதை ஒரு தேசி கீசர் (desi geyser) என்று அழைக்கிறோம். பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இது உள்ளது. இப்போது, போராட்ட களத்திலும் எங்களுடன் இது உள்ளது. இது லங்காரில் (Langar) பயன்படுத்த எங்களுக்கு சங்கட்டால் (sangat) வழங்கப்பட்டது. இதை யார் வேண்டுமென்றாலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று போராட்டக்காரர்களுக்கு கீர் (Kheer) தயாரிக்கும் போது கூறினார். 

  பிரம்மாண்டமான ரொட்டி தயாரிக்கும் மெஷின்களைப் (roti-making machines) போல தோற்றத்தில் பெரிதாக இல்லாவிட்டாலும், அனைவராலும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய இந்த உள்நாட்டு கீசர்கள் (indigenous geysers), போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு உண்மையில் பயனளிப்பவை என்பதை நிரூபித்து வருகின்றன, இது சமைக்கவும் , குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

  குறிப்பாக இந்த குளிர்காலத்தில் இது பலருக்கும் உதவுகிறது. ஒரு கீசர் மெஷினுக்கு ரூ. 3,000-3,500 வரை செலவாகும், இந்த மெஷின் இப்போது போராட்ட களம் முழுவதும் காணப்படுகிறது. விறகு அல்லது கரி போன்ற மலிவான எரிபொருள் மற்றும் ஒருசில உள்நாட்டு கழிவுகளையும் இதற்கு எரியூட்டியாக பயன்படுத்தலாம். போராட்ட களத்திற்கு அருகிலுள்ள லாங்கரைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர், "ஒவ்வொரு நாளும் இங்கு ஒரு டிரக் லோடு கழிவு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கீசர்கள் இருப்பதால் அத்தகைய கழிவுகளின் சில பகுதிகள் கீசருக்கு பயன்படுகிறது. இது ஒரு சிறிய விஷயம் அல்ல" என்று கூறினார். 

  லூதியானாவைச் சேர்ந்த 36 வயதான குர்பிரீத் சிங் (Gurpreet Singh) போராட்ட களத்தில் பஞ்சாப் மக்களால் முயற்சித்த மற்றும் சோதனை செய்யப்பட்ட கீசர்களைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், காஜியாபாத்தை சேர்ந்த 27 வயதான அஜய் நகர் (Ajay Nagar) இது குறித்து தெரிந்து கொள்ளும்போது தான் உண்மையில் ஆச்சர்யப்பட்டதாகவும் கூறினார். "ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்ட களங்களில் பயன்படுத்தும் புதிய புதுமையான விஷயங்களைப் பற்றி நீங்கள் ஊடகங்கள் வழியாக கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களைப் போலத்தான் நானும் ஊடகங்கள் வழியாக இந்த புதுமையான விஷயங்களை கேட்டேன், ஆனால் இப்போது போராட்டத்தை ஆதரிக்க எனது நண்பர்களுடன் இந்த இடத்திற்கு வந்த பின்பு நானே அதை நேரடியாக பார்த்து வியந்து போனேன் என்று அஜய் நகர் (Ajay Nagar) தெரிவித்தார். 

  முன்னதாக, போராட்ட இடங்களில் கால்-மசாஜ்கள் (foot-massagers), "பீஸ்ஸா லங்கர்" ("pizza langar") மற்றும் "சலோன் சேவா" ("Salon Sewa") போன்றவைகள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளைக் கவர்ந்தன. மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு (three new Farm Laws) எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் (Punjab and Haryana) சேர்ந்தவர்கள், கடந்த நவம்பர் மாத பிற்பகுதியில் இருந்து தேசிய தலைநகரின் எல்லைகளில் தங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

  Gold Rate | 38 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம் விலை....

   இந்த சட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த 3 சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை என்றும், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யவில்லை என்றும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானவை என்றும் எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் தெரிவித்துள்ளன.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: