PUNJAB YOUTH CONGRESS WORKERS PROTEST AGAINST THE FARM LAWS SKV
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டிராக்டரை எரித்து காங்கிரஸ் போராட்டம் (வீடியோ)
டிராக்டரை எரித்து காங்கிரஸ் போராட்டம்
வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கேட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் டிராக்டரை எரித்தனர்.
வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் டிராக்டரை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
புதியதாக திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
#WATCH: Punjab Youth Congress workers stage a protest against the farm laws near India Gate in Delhi. A tractor was also set ablaze. pic.twitter.com/iA5z6WLGXR
இதில் இந்தியா கேட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் டிராக்டரை எரித்தனர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகத்தில் திமுக தலைமையில் போராட்டம் நடைபெற்றது.