Home /News /national /

ராமர் - ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை மீது கடும் நடவடிக்கை...

ராமர் - ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை மீது கடும் நடவடிக்கை...

பஞ்சாப் பல்கலைக்கழகம்

பஞ்சாப் பல்கலைக்கழகம்

Punjab University | ராமரையும் ராவணனையும் ஒப்பிட்டு ராமரை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்த பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியையை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி ப்ரோபஸ்னல் பல்கலைக்கழகத்தின் பெண் பேராசிரியர் ஒருவர் ராமர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    குர்சங் ப்ரீத் கவுர் என்ற அந்த உதவி பேராசிரியை, மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த போது ராமரை கடுமையாக விமர்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அந்த பேராசிரியை மீது கடும் விமர்சனம் எழுந்த நிலையில் பல்கலைக்கழகம் பேராசிரியையை பணியை விட்டு நீக்கியுள்ளது.

    சம்பந்தப்பட்ட வீடியோவில் அந்த பேராசிரியை, "ராவணன் மிகவும் நல்ல மனிதர். ராமர் நல்ல மனிதர் அல்ல. ராமர் மிகவும் தந்திரமானவர் என நான் நினைக்கிறேன். சீதையை கவர ராமர் திட்டமிட்டார். சீதையை துன்பத்தில் தள்ளிய ராமர், ராவணன் மீது அனைத்து பழியையும் போட்டுவிட்டார். யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை நாம் எப்படி முடிவு செய்ய முடியும். ஒட்டுமொத்த உலகமும் ராமரை வழிபடுகிறது. ராவணனை தீயவன் என்கிறது. ஆனால் அனைத்து திட்டங்களையும் தீட்டியது ராமர் தான். அப்படி இருக்க அவர் எப்படி நல்லவராக இருக்க முடியும். அவர் தந்திரமானவர்" என பேசியுள்ளார்.

    இந்த வீடியோ வைராலான நிலையில், இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' இந்த சம்பவம் பலரையும் காயப்படுத்தியுள்ளது என்பதை உணர்கிறோம். பேராசிரியை குர்சங்கின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தாகும். பல்கலைக்கழக விதியை மீறி பேசியதற்காக அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளோம். இந்த சம்பவத்திற்காக பெரிதும் வருந்துகிறோம். இந்த நிறுவனம் அனைத்து மதங்களையும் நம்பிக்கையையும் அன்புடன் மதிக்கிறோம்' என்றுள்ளது.

    இதையும் படிங்க: அதிக கட்டணம் வசூலிக்கும் 720 தனியார் பள்ளிகள்.. ஆக்‌ஷனில் இறங்கிய பஞ்சாப் அரசு

    இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் அசோக் குமார் மிட்டல் வருத்தம் தெரிவித்ததுடன் பேராசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அசோக் குமார் அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த விவகராம் தொடர்பாக பேராசிரியை குர்சங் தரப்பில் எந்தவித விளக்கமும் இதுவரை தரப்படவில்லை. சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்வினை வந்ததை அடுத்து அவர் தனது பேஸ்புக் மற்றும் லிங்க்டு இன் பக்கங்களை டீ ஆக்டிவேட் செய்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Assistant Professor, Punjab

    அடுத்த செய்தி