ஹோம் /நியூஸ் /இந்தியா /

பஞ்சாப்பில் சிவசேனா தலைவர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை : சைக்கிளில் வந்த நபர் வெறிச்செயல்

பஞ்சாப்பில் சிவசேனா தலைவர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை : சைக்கிளில் வந்த நபர் வெறிச்செயல்

சுட்டுகொல்லப்பட்ட பஞ்சாப் சிவசேனா தலைவர் சுதிர் சூரி

சுட்டுகொல்லப்பட்ட பஞ்சாப் சிவசேனா தலைவர் சுதிர் சூரி

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறை கைது செய்து அவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Punjab, India

  பஞ்சாப் அமிர்தசரஸில் சிவசேனா தலைவர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் கோவிலின் சிலைகள் சேதப்படுத்தியது மற்றும் கோவில் வளாகத்துக்கு வெளியே குப்பையில் உடைக்கப்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பஞ்சாபில் சிவசேனா கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தினர். அமிர்தசரசில் உள்ள கோவிலுக்கு வெளியே சிவசேனா தலைவர் சுதிர் சூரி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

  இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சிவசேனா தலைவர் சுதி சூரியை நோக்கி சுட்டதில் 2 குண்டுகள் அவர் மீது பாய்ந்தது. இந்த துப்பாக்கிசூட்டில் பலத்த காயமடைந்த சுதிர் சூரியை ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதபமாக உயிரிழந்தார்.

  இதையும் படிங்க: வரதட்சணை காரை உற்சாகத்தில் ஓட்டிப்பார்த்த புது மாப்பிள்ளை... பிரேக் என ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபரீதம்

  இந்த சம்பவத்தால் அமிர்தசரசில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறை கைது செய்து அவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பஞ்சாப் திப்பா சாலை கிரேவால் காலனியில் உள்ள பஞ்சாப் சிவசேனா தலைவர் அஸ்வனி சோப்ராவின் வீட்டின் அருகே சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Gun fire, Punjab