மின்வெட்டு: அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் குறைப்பு!

மாதிரிப் படம்

அரசு அலுவலகங்களின் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த நேரத்தில் ஏ.சி. பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  பஞ்ஞாப் மாநிலத்தில் நிலவும் கடுமையாக வெயில் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் குகைக்கப்பட்டுள்ளது.

  வட மாவட்டங்களில் வெளியில் வாட்டி வருகிறது. இதன் தாக்கம் பஞ்சாபில் தெரிகிறது. இதனுடன் மின் ஊழியர்கள் போராட்டம் போன்றவை காரணமாக  மின்சார தட்டுப்பாடும் நிலவுகிறது. ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், ஒரு நாளுக்கு 5 முதல் 6 மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இதனிடையே, மின் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.  மேலும் மின் பற்றக்குறையை சமாளிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி,  அரசு அலுவலகங்களின் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த நேரத்தில் ஏ.சி. பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.   பல்வேறு நிறுவனங்களில் 2 நாட்கள் விடுமுறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  விவசாயிகளுக்கு மின்சார வினியோகத்தில் முன் உரிமை அளிக்க அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.  பஞ்சாப், ஹரியானா,  சண்டிகார்க்,  டெல்லி, வடக்கு ராஜஸ்தான்,  உத்தரபிரதேசம், வடமேற்கு மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கடுமையான வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  Published by:Murugesh M
  First published: