Home /News /national /

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்கள் தனித்தனியாக வாக்களிக்க புது ஏற்பாடு.. இந்திய தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்!

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்கள் தனித்தனியாக வாக்களிக்க புது ஏற்பாடு.. இந்திய தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்!

ஒன்றாக வளர்ந்த இவர்கள், பட்டயப்படிப்பை முடித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில மின்சார வாரியத்தில் வேலை வாங்கியதன் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

    ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்கள் இருவர், பஞ்சாபில் தேர்தலில் தனித்தனியாக வாக்களித்துள்ளனர். எப்படி இந்த சாதனை சாத்தியமானது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

    சூர்யாவின் மாற்றான் திரைப்படத்தில் வருவது போல பிறக்கும் போதே உடலோடு ஒட்டிப் பிறந்தவர்கள் இந்த சோஹ்னா மற்றும் மோஹ்னா. 2003-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர்களை பெற்றோர் கைவிட்டனர்.

    இரு இதயம், இரு முதுகுத்தண்டு, 4 கைகள் இருந்த போதும் ஒற்றை கல்லீரல், 2 கால்கள் மட்டுமே இருந்ததால் இவர்களை பிரிக்க முடியாது என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, பஞ்சாப்-பின் அமிர்தசரஸில் உள்ள பிங்கல்வாராவில் தொண்டு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டனர்.

    இதையும் படிங்க: சர்வதேச தாய்மொழி தினம் : இந்தியாவில் பேசப்படும் தாய் மொழிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

    ஒன்றாக வளர்ந்த இவர்கள், பட்டயப்படிப்பை முடித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில மின்சார வாரியத்தில் வேலை வாங்கியதன் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். 18 வயது நிரம்பியதை அடுத்து ஓட்டுரிமை கேட்டு இருவரும் விண்ணப்பித்தனர்.

    பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு இவர்களுக்கு தனித்தனியாக் வாக்குரிமையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது. இதனையடுத்து, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அமிர்தசரஸில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த இவர்களுக்கு அங்கிருந்த அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஒட்டிப்பிறந்தவர்கள் என்பதால் ஒன்றாகவே வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒருவர் வாக்களிப்பதை மற்ற யாரும் பார்க்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளது. இதனால் இந்த மாற்றான் சகோதரர்களில் ஒருவர் வாக்களிக்கும் போது மற்றவர் அதை பார்க்காமல் இருப்பதற்காக பிரத்யேக கண்ணாடி வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வுகள் அனைத்தும் தேர்தல் ஆணைய உத்தரவின்படி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. வெற்றிகரமாக ஓட்டுபோட்ட சோஹ்னா – மோஹ்னா சகோதரர்களை அனைவரும் பாராட்டினர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி