• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பஞ்சாப்பின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு

பஞ்சாப்பின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு

சரண்ஜித் சிங் சன்னி

சரண்ஜித் சிங் சன்னி

புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதையடுத்து ராஜ்பவன் சென்று ஆளுநரை சரண்ஜித் சிங் சன்னி சந்தித்தார்

  • Share this:
    பஞ்சாப்பின் முதலமைச்சராக  இருந்த அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதலமைச்சராக  சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஞ்சாப் முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று ராஜினாமா செய்தார். கடந்த சில நாட்களாகவே கேப்டன் அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் கூட்டாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாகவும், அதில் முதல்வராக அமரிந்தர் சிங் தொடர்ந்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த சூழலில் தான் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது, ஆனால் அதற்கு முன்னரே ஆளுநர் மாளிகை சென்ற கேப்டன் அமரிந்தர் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

    இதையடுத்து, புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதையடுத்து ராஜ்பவன் சென்று ஆளுநரை சரண்ஜித் சிங் சன்னி சந்தித்தார்.  முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய மீடூ புகார் ஒன்றில் தண்டனையை எதிர் நோக்கியுள்ளார்.

    சரண்ஜித் சிங் சன்னி 2018 ஆம் ஆண்டில் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு தகாத செய்தியை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் இது குறித்து புகார் செய்யவில்லை, பின்னர் அமரீந்தர் சிங் பிரச்சினை "தீர்க்கப்பட்டது" என்று கூறினார். ஆனால் இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது, பஞ்சாப் மகளிர் ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இது தொடர்பாக மகளிர் ஆணையத்தின்  தலைவர் மனிஷா குலாட்டி இது குறித்து கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்போது பஞ்சாப் மாநிலத்தை விட்டு மாற்றாகி சென்றுவிட்டார்.  இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்னை வலியுறுத்தினர். இதையடுத்து பஞ்சாப் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு ஒருவாரத்தில் பதில் அளிக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன்  என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: