பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: விவசாயப் போராட்டங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் அமோக வெற்றி முகம்- பெரோஸ்பூரில் 33-க்கு 33 வெற்றி

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: விவசாயப் போராட்டங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் அமோக வெற்றி முகம்- பெரோஸ்பூரில் 33-க்கு 33 வெற்றி

கோப்புப்படம்

மோகாவில் 50 உறுப்பினர் கொண்ட மாநகராட்சியில் காங்கிரஸ் 20 இடங்களையும் சிரோமணி அகாலிதளம் 15 இடங்களையும் சுயேச்சை 10 இடங்களையும் ஆம் ஆத்மி 4 இடங்களையும் பாஜக 1 இடத்தையும் கைப்பற்றின.

 • Share this:
  பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8 மாநகராட்சியில் 6ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. பதிண்டா, ஹோசியார்ப்பூர், கபுர்தலா, பதான்கோட், மோகா, அபோகர் மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

  பஞ்சாபில் 8 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சிகளும் எந்த மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை. பஞ்சாப் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்தது.

  விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

  கரார் முனிசிபல் கார்ப்பரேஷனில் காங்கிரஸ் 10 வார்டுகளில் வெற்றி பெற சிரோமணி அகாலிதள் 8 இடங்களிலும் ஆம் ஆத்மி 1 இடத்திலும் வென்றுள்ளது.

  மோகா முனிசிபல் கார்ப்பரேஷனை காங்கிரஸ் வென்றதன் மூலம் 8 மாநகராட்சிகளில் 6-ஐ காங்கிரஸ் கைப்பற்றியது.

  மோகாவில் 50 உறுப்பினர் கொண்ட மாநகராட்சியில் காங்கிரஸ் 20 இடங்களையும் சிரோமணி அகாலிதளம் 15 இடங்களையும் சுயேச்சை 10 இடங்களையும் ஆம் ஆத்மி 4 இடங்களையும் பாஜக 1 இடத்தையும் கைப்பற்றின.

  பெரோஸிபூர் முனிசிபல் கவுன்சிலில் 33 இடங்களில் 33-ஐயும் காங்கிரஸ் கைப்பற்றியது.

  அதே போல் பதான்கோட்டில் 50 சீட்களில் காங்கிரஸ் 37 சீட்களைக் கைப்பற்றியுள்ளது.

  பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது கவுரவம் சம்பந்தப்பட்டதாகும். பாஜகவும் சிரோமணி அகாலிதளமும் 20 ஆண்டுகாலக் கூட்டணிக்குப் பிறகு தனித்தனியே போட்டி கண்டு பின்னடைவு கண்டுள்ளது. ஆம் ஆத்மி முதன் முதலாகப் போட்டியிடுகிறது.

  பஞ்சாபில் 2,302 வார்டுகள், காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி, சுயேச்சை வேட்பாளர்கள் சேர்த்து 9,222 பேர் போட்டியிடுகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: