ஹோம் /நியூஸ் /இந்தியா /

லஞ்சப் புகார்- அமைச்சரை பதவியிலிருந்து தூக்கி ஒரு மணி நேரத்தில் கைது- பஞ்சாப் முதல்வர் அதிரடி

லஞ்சப் புகார்- அமைச்சரை பதவியிலிருந்து தூக்கி ஒரு மணி நேரத்தில் கைது- பஞ்சாப் முதல்வர் அதிரடி

 விஜய் சிங்லா, பகவத் மான்

விஜய் சிங்லா, பகவத் மான்

பஞ்சாப்பில் அரசுப் பணிகளுக்கு கமிஷன் கேட்ட அமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு அகற்றிவிட்டு ஆம் ஆத்மி அங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சாரத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதி பிரதானமாக இருந்தது. அந்த வாக்குறுதிக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக ஆம் ஆத்மி மிகப்பெறும் வெற்றி பெற்றது.

அதனையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் 17-வது முதல்வராக பதவியேற்றார். பஞ்சாப் மாநிலத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகவந்த் சிங் உறுதியளித்தார்.

இந்தநிலையில், பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டுவருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் அவர் 1% கமிஷன் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்கான சரியான ஆதாரங்கள் கிடைத்ததால், முதல்வர் பரிந்துரையின்பேரில் இன்றுகாலை விஜய் சிங்லா பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

விஸ்மயா வரதட்சணை மரண வழக்கு: கணவருக்கு 10 ஆண்டு சிறை, 12.50 லட்சம் அபராதம்

அமைச்சர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் அடுத்த சிலமணி நேரங்களில் விஜய் சிங்லாவை பஞ்சாப் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். ஒரு மாநில அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுக்காக உடனடியாக கைது செய்யப்பட்டது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்த ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவில், ‘உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் பகவந்த் மான். உங்களுடைய நடவடிக்கை என்னுடைய கண்ணில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. ஆம் ஆத்மியை நினைத்து மொத்த நாடும் பெருமை கொள்ளும்’ என்று பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Punjab