பஞ்சாப் மாநிலத்தில் 88 வயது முதியவருக்கு ரூ.5 கோடி ரூபாய் லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. சுமார் 40 ஆண்டுகால தொடர் முயற்சிக்குப் பின்னர் லாட்டரியில் இவர் பரிசு பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் தேராபாசி பகுதியைச் சேர்ந்தவர் மஹந்த் துவாரகா தாஸ். 88 வயதான இவர் 1947ஆண்டு சுதந்திரத்தின் போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தேரா என்ற சமூக மத அமைப்பு அதிகமுள்ள நிலையில், அத்தகைய ஒரு அமைப்பில் பணிபுரிந்து வருகிறார் மஹந்த். இவருக்கு நரேந்திர குமார் என்ற மகன் உள்ளார். மிகப் பெரிய லாட்டரி சீட் பிரியரான மஹந்த் சுமார் 40 ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் லோஹ்ரி மகர சங்கராந்தி லாட்டரி டிக்கெட்டை மஹந்த் வாங்கியுள்ளார். இந்த லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில், ரூ.5 கோடி ரூபாய் பம்பர் லாட்டரி பரிசு மஹந்துக்கு கிடைத்துள்ளது.
இதனால் 88 வயது மஹந்துடன் அவரது ஒட்டுமொத்து குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. மஹந்த் தனது பேரனிடம் காசு கொடுத்து இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதற்கு பரிசு கிடைத்து அவரது குடும்பத்திற்கு கூடுதல் மகிழ்ச்சி. தனது பணத்தில் ஒரு பகுதியை தேரா அமைப்புக்கும் மீதியை இரு மகன்களுக்கும் பகிர்ந்து அளிக்கவுள்ளதாக மஹந்த் தெரிவித்துள்ளார்.
ஆனால், பரிசுதொகை ரூ.5 கோடி முழுமையாக மஹந்திற்கு கிடைக்காது. அதில் 30 சதவீதம் வரியாக கழித்தப் பின்புதான் மஹந்திற்கு பரிசு பணமாக கிடைக்கும் என லட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. எது எப்படியோ 40 ஆண்டுக்காலம் நம்பிக்கையுடன் லாட்டரி வாங்கியதற்காக 88ஆவது வயதில் முதியவர் மஹந்திற்கு பலன் கிடைத்துள்ளது பலரையும் ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.