மகளின் காதலன் குடும்பத்தினர் 4பேரை சுட்டுக்கொன்ற தந்தை - பஞ்சாபில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பஞ்சாப்

துப்பாக்கி குண்டுகளில் காயமடைந்தவர்களை கிராம மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 • Share this:
  மகளின் காதலனின் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.

  பஞ்சாப் மாநிலம் பலர்வால் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ஜிந்தர் சிங். 10வது படிக்கும் இவரது மகள் அதேகிராமத்தை சேர்ந்த சேர்ந்த 22 வயது வாலிபரான ஜெர்மன்ஜீத் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். மகளின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தை தனது மகளை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ஜெர்மன் ஜீத் சிங் தனது தந்தை சுக்விந்தர் சிங்குடன் அவர்களது வயலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு சென்ற சுக்ஜிந்தருக்கும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த சுக்ஜிந்தர் சிங் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகளின் காதலனையும் அவரை தந்தையும் சுட்டுள்ளார்.

  இதில் சுக்விந்தர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு இளைஞரின் உறவினர்களான தாத்தா மங்கல் சிங், மாமா ஜஸ்பீர் சிங், பபன்தீப், ஜாஷன் ஆகியோர் வந்துள்ளனர். அவர்களையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். கிராம மக்கள் வருகையை கண்டு சுக்ஜிந்தர் அங்கிருந்து ஓடிவிட்டார். துப்பாக்கி குண்டுகளில் காயமடைந்தவர்களை கிராம மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  இந்த சம்பவத்தில் சுக்விந்தர், மங்கல் சிங், ஜஸ்பீர், பபன்தீப் ஆகியோர் கொல்லப்பட்டனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான சுக்ஜிந்தர் சிங் போலீஸார் தேடி வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: