ஹோம் /நியூஸ் /இந்தியா /

நைட் ஷிப்ட் முடிந்து திரும்பியவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 பெண்கள்.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்

நைட் ஷிப்ட் முடிந்து திரும்பியவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 பெண்கள்.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பாலியல் வன்கொடுமை செய்த பிறகு கண்ணை கட்டி அவரை காட்டுக்குள் விட்டு சென்றதாக தகவல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Punjab, India

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் என்ற இடத்தில் ஒரு நபர் 4 பெண்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஆண்களுக்கு எதிரான பாலியல் சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியை சேர்ந்த அந்த நபர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உள்ளூர் ஊடகத்திடம் பேசியுள்ளார். தனக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று வேலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது, வெள்ளை நிற காரில் வந்த 4 பெண்கள் முகவரி கேட்பது போல ஒரு சீட்டை காட்டி தன் கண்களில் ஏதோ ஸ்பிரே அடித்து கடத்தியதாக கூறினார்.

இதையும் படிங்க:  திருச்சியை மிரள வைத்த 5 கொலைகள்... கண்களை மூடிய கள்ளக்காதல்.. சாமியார் கண்ணன்-கள்ளக்காதலி யமுனாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தொடர்ந்து அவரை ஆள் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியான துன்புறுத்தல் அளித்துள்ளனர். ஸ்பிரே அடித்த பிறகு நினைவு திரும்பும் நேரங்களில் பெண்கள் அவருக்கு மது பானம் கொடுத்ததாகவும் கூறினார். தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் கண்ணை கட்டியபடி காட்டுக்குள்ளேயே விட்டு சென்றுவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க | விவசாயியின் நாக்கை கடித்த விஷ பாம்பு.. நாக சாந்தி பூஜையில் நேர்ந்த விபரீதம்..!

அந்த 4 பெண்களும் தன்னிடம் பஞ்சாபில் பேசியதாகவும், அவர்களுக்குள் ஆங்கிலத்தில் பேசியதாகவும் தெரிவித்த அவர், போலீசில் புகார் அளிக்க சென்ற போது அச்சமடைந்த மனைவி வேண்டாம் என கூறியதாகவும் தெரிவித்தார். இந்த செய்தி வெளியானதையடுத்து, போலீசார் அவர்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

First published:

Tags: Crime News, Gang rape, Punjab, Rape, Sexual abuse