Home /News /national /

அசுத்தமான படுக்கையில் துணை வேந்தரை படுக்க வைத்த சுகாதாரத்துறை அமைச்சர்.. பஞ்சாப்பில் வெடித்த சர்ச்சை

அசுத்தமான படுக்கையில் துணை வேந்தரை படுக்க வைத்த சுகாதாரத்துறை அமைச்சர்.. பஞ்சாப்பில் வெடித்த சர்ச்சை

சர்ச்சையில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர்

சர்ச்சையில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர்

தனக்கு அவமதிப்பு நிகழ்ந்த அடுத்த நாளே தனது துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ராஜ் பகதூர்.

    பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அம்மாநில பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பொது வெளியில் அவமதிக்கும் விதமாக கறாராக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த துணை வேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சராக சேத்தன் சிங் ஜோராமாஜ்ரா என்பவர் உள்ளார். இவர் அம்மாநிலத்தில் உள்ள குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாபா பரித் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான புகழ்பெற்ற மருத்துவர் ராஜ் பகதூர் அமைச்சருடன் உடன் இருந்தார். 71 வயதான ராஜ் பகதூர் அம்மாநில மருத்துவத்துறையின் மிகவும் மதிப்பு மிக்க நபராவார்.

    இந்நிலையில் அமைச்சர் தனது ஆய்வின் போது மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தார். அத்துடன் அங்குள்ள படுக்கைகள் மிகவும் மோசமாகவும் அச்சுத்தமாகவும் இருப்பதாக துணை வேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளை கடிந்து கொண்டார். அத்தோடு நிற்காமல், அங்கு அசுத்தமான படுக்கையில் நீங்கள் படுங்கள் எனக் கூறி 71 வயதான துணை வேந்தரை வற்புறுத்திப் படுக்க வைத்துள்ளார். அமைச்சர் ஒருவர் ஆய்வின் போது துணை வேந்தர் ஒருவரிடம் இவ்வாறு பொது வெளியில் நடந்துகொண்டது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


    எதிர்க்கட்சியான காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆம் ஆத்மி அமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளது. மதிப்பு மிக்க நபரை இவ்வாறு அவமதிக்கும் விதமாக செயல்பட்ட அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அம்மாநில ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் கங்க் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். முன்னணி மருத்துவர்கள் தான் மாநில சுகாதாரத்துறையின் தூண்கள் என்ற அவர், இதை கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன என்றார்.

    இதையும் படிங்க: தண்ணீல கால்படக்கூடாதாம்.. மாணவர்கள் சேர்பிடிக்க ஒய்யாராமாய் நடந்து சென்ற ஆசிரியை - வீடியோ வைரலானதால் டீச்சர் சஸ்பெண்ட்

    இந்நிலையில், தனக்கு அவமதிப்பு நிகழ்ந்த அடுத்த நாளே தனது துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ராஜ் பகதூர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Aam Aadmi Party, Health Minister, Punjab, Viral Video

    அடுத்த செய்தி