முகப்பு /செய்தி /இந்தியா / 16 வயது இஸ்லாமிய பெண்ணின் திருமணத்தை அங்கீகரித்த பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்றம்: காரணம் என்ன?

16 வயது இஸ்லாமிய பெண்ணின் திருமணத்தை அங்கீகரித்த பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்றம்: காரணம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

Muslim girls marriage age: மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், இந்திய அரசியலமைப்பில் அவர்கள் எதிர்பார்த்த அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இஸ்லாமிய பெண்கள் 16 வயதில் திருமணம் செய்துகொள்ளலாம் என  பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. 

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தங்கள் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி, இஸ்லாமிய இளம் தம்பதியர் மனுத்தாக்கல் செய்தனர். மணமகனுக்கு 21 வயது நிறைவு பெற்ற போதிலும், மணப்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே ஆகி இருந்ததால் இவ்வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது.

இந்திய சட்டப்படி குறைந்தபட்ச திருமண வயதாக ஆண்களுக்கு 21 வயது என்றும் பெண்களுக்கு 18 என்றும் உள்ளது. இப்போது பெண்களுக்கும் 21 வ்யது என்று மாற்ற சட்டம் வகுக்கும் நேரத்தில் இந்த வழக்கு கவனம் பெற்றது.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜஸ்ஜித் சிங் பேடியின் ஒற்றை நீதிபதி அமர்வு, தம்பதியர் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகிய இருவரது வாதங்களையும் கேட்டது. பெற்றோர்கள் தரப்பில் இந்த திருமணத்தில் அவர்களுக்கு விருப்பமில்லை எனவும் மணப்பெண் 18 வயதை கூட எட்டாத மைனர் என்றும் வாதிடப்பட்டது.

இஸ்லாமிய ஷரியா விதியை மேற்கோள் காட்டி நீதிபதி, இஸ்லாமிய பெண்ணின் திருமணம் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. “சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் 'முஹம்மதின் சட்டத்தின் கோட்பாடுகள்' என்ற புத்தகத்தின் பிரிவு 195 இன் படி, மணப்பெண் 15 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதால், அவர் விரும்பும் நபருடன் திருமண வாழ்க்கை நடத்தத் தகுதியுடையவர். மணமகன் 21 வயதுக்கு மேற்பட்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மனுதாரர்கள் இருவரும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி திருமண வயதுடையவர்களே” என்றார் நீதிபதி ஜஸ்ஜித் சிங்.

இதையும் படிங்க: டெல்லியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை கனரக வாகனங்களுக்குத் தடை!

“மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், இந்திய அரசியலமைப்பில் அவர்கள் எதிர்பார்த்த அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது” என்று நீதிபதி ஜஸ்ஜித் சிங் குறிப்பிட்டார். இதையடுத்து  இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜஸ்ஜித் சிங், முஸ்லிம் தம்பதியரின்  திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தார்.

மனுதாரர்களின் அச்சத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும். தம்பதியருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கவும் பதன்கோட் காவல் கண்காளிப்பாளருக்கு உத்தரவிட்டார்

First published:

Tags: HighCourt, Marriage, Muslim Religion