பஞ்சாப்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி அரசு, அதிக கட்டணம் வசூலிக்கும் 720க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அரசு விதிமுறைகளை மீறி இந்த பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கான உத்தரவை மாநிலத்தின் கல்வி அமைச்சர் குர்மீத் சிங் வெளியிட்டுள்ளார்.
' பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் 720 பள்ளிகள் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மீதான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரவித்துள்ளார். கடந்த மாதம் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மன், தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது, குறிபிட்ட கடைகளில் மாணவர்களை புத்தகம், சீருடை, ஸ்டேஷனரி பொருள்கள் போன்றவற்றை வாங்க வற்புறுத்துவதாக அரசுக்கு புகார் வருகிறது. இது தொடரக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சட்டவிரோத ஆயுத பயிற்சி - தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாவோயிஸ்டுகள் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அரசின் இந்த உத்தரவு குறித்து ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் மல்வீந்தர் சிங் கங் பேசுகையில், "மாநிலத்தில் தரமான கல்வியை அனைவரும் பெற பஞ்சாப் முதலமைச்சர் தலைமையிலான அரசு முனைப்பு காட்டியுள்ளது. அதன் முக்கிய நடவடிக்கையாகத் தான் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. விசாரணையில் பள்ளிகள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அந்த நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அன்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. டெல்லி அல்லாமல் மற்றொரு மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை. டெல்லி மாடல் ஆட்சி என்ற கோஷத்துடன் பஞ்சாப் மக்களிடம் தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் மின் விநியோகம் போன்ற அடிப்படை விஷங்களில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் ஊழல் அற்ற ஆட்சி என்பதை தனது முக்கிய தாரக மந்திரமாகவும் ஆம் ஆத்மி கூறி வருகிறது.
டெல்லியைப் போலவே பஞ்சாப் மாநில மக்களுக்கு மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவத் மன் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Private schools, Punjab