பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருத்துகணிப்பு இன்று வெளியாகி உள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 1304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மனி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் ஆம் ஆத்மி, பாஜக - பிஎல்சி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.
இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பின் படி அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வாய்புள்ளது. ஆம்ஆத்மி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்துகணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ABP கருத்துகணிப்பு வெளியீடு
காங்கிரஸ் - 28
ஆம் ஆத்மி - 61
சி.அகாலிதளம் - 25
மற்றவை - 5
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் இந்திய டூடே கருத்துகணிப்பு வெளியீடு
காங்கிரஸ் - 31
ஆம் ஆத்மி - 90
சி.அகாலிதளம் - 11
பாஜக கூட்டணி - 4
மற்றவை - 2
கருத்துக்கணிப்பு முடிவுகளை ShareChat-லும் தெரிந்துகொள்ளலாம்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.