Home /News /national /

பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்!

பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்!

அமரிந்தர் சிங்

அமரிந்தர் சிங்

இந்த நாட்டையும் மாநிலத்தையும் காப்பது நமது கடமை. அதனால் தேசத்தின் நலன் கருதி பாஜகவில் இணைந்துள்ளேன் - அமரிந்தர் சிங்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Punjab, India
    பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரான கேப்டன் அம்ரீந்தர் சிங் அவரது ஆதரவாளர்களான 7 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்.பியுடன் பாஜகவில் இணைந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் பிரதான தலைவராக இருந்தவர் அம்ரிந்தர் சிங். இவரது இரண்டாவது ஆட்சி காலத்தில் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து மேலிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இவருக்கும் சித்துவுக்கும் இடையே கட்சி விவகாரங்களில் கடும் பனிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். பின்னர் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்ரிந்தர் சிங், அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

    பின்னர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கினார். இதனையடுத்து நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தார்.

    இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமாகவும் ஆதரவாகவும் செயல்பட்டு வந்த அம்ரீந்தர் சிங் தற்போது, அவர் தொடங்கிய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.

    இதையும் வாசிக்க: சோனியா காந்தியை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

    இந்நிலையில் தனது ஆதரவாளர்களான 7 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்.பியுடன் இணைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பஞ்சாப் ஒரு எல்லை மாநிலம். பாகிஸ்தான் உடனான உறவு நலிவடைந்து வருவதை கவனித்து வருகிறேன். சீனாவுடனான ராஜாங்கரீதியான உறவும் நலிவடைந்து வருகிறது. இந்த நாட்டையும் மாநிலத்தையும் காப்பது நமது கடமை. அதனால் தேசத்தின் நலன் கருதி பாஜகவில் இணைந்துள்ளேன்” என கூறினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Amarinder Singh, BJP, Congress

    அடுத்த செய்தி