• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காங்கிரசுடன் கசந்த உறவு.. அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்குகிறார்! - பாஜகவுக்கு ஆதரவு?

காங்கிரசுடன் கசந்த உறவு.. அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்குகிறார்! - பாஜகவுக்கு ஆதரவு?

Amarinder singh

Amarinder singh

அமரிந்தர் சிங் கடந்த செப்டம்பர் மாதம் தனது முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

  • Share this:
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து புதிதாக கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு ஏற்படுத்தினால் பாஜக கூட்டணியில் இணைந்து ஆதரவு தருவதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் வாய்ந்த தலைவராக வலம் வந்தவர் கேப்டன் அமரிந்தர் சிங். மன்னர் குடும்ப வாரிசான இவர் ராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார். இந்திய - பாகிஸ்தான் போரில் பங்கேற்றவர். ராஜீவ் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டவர். சோனியா காந்தி குடும்பத்தின் விசுவாசியாக அறியப்படுபவர். 79 வயதாகும் அமரிந்தர் சிங் சமீபத்திய ஆண்டுகளில் நவ்ஜோத் சிங் சித்துவுடனான அரசியல் மோதல் காரணமாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் தனது முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார். சிறிது நாட்கள் கழித்து டெல்லி சென்று அமித்ஷாவை, அமரிந்தர் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதே அவர் பாஜகவில் இணையலாம் என கூறப்பட்டது. ஆனால் அதனை அமரிந்தர் மறுத்தார். அதே நேரத்தில் அவர் தற்போதும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகாமல் இருந்து வருகிறார்.

Also read:  ‘பிரதமர் மோடி படிக்காதவர்.. ராகுல் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்’ – கர்நாடகாவில் காங்கிரஸ் vs பாஜக!

இந்நிலையில் அமரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல், அமரிந்தர் விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அமரிந்தர் கூறியதாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில், “பஞ்சாப் எதிர்காலத்துக்காக போராட்டம் தொடருகிறது. மிக விரைவாகவே பஞ்சாப் மாநில மற்றும் மக்களின் நலன், கடந்த ஓராண்டாக போராடி வரும் விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன்



விவசாயிகளில் நலனை காக்கும் வகையில் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணப்பட்டால் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பேன். மேலும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட அகாலிதளத்தில் இருந்து தனியாக பிரிந்த குறிப்பாக திண்ட்சா மற்றும் பிரம்புரா பிரிவுகளுடனும் கூட்டணி வைப்பேன்.

Also read: பிரதமர் மோடியை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்ட திரிணாமுல் எம்.பி!

பஞ்சாப் மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டேன். உள்ளிருந்து மற்றும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காக்க பஞ்சாபுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவைப்படுகிறது. இன்று ஆபத்தில் இருக்கும் அதன் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை நான் என் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” இவ்வாறு கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

முதல்வர் பதவியை கேப்டன் அமரிந்தர் ராஜினாமா செய்த போதே, தன்னிடம் இன்னும் அரசியல் ஆளுமை எஞ்சியிருப்பதாகவும், 40 வயதில் வயதானவராகவும், 80 வயதில் இளைஞராகவும் இருக்க முடியும், நேரம் வரும்போது எதிர்கால திட்டத்தை அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: