Home /News /national /

Bhagwant Mann : காமெடி நடிகராக வாழ்க்கையை தொடங்கி பஞ்சாபின் முதல்வராகப் போகும் பக்வாந்த் மன்...

Bhagwant Mann : காமெடி நடிகராக வாழ்க்கையை தொடங்கி பஞ்சாபின் முதல்வராகப் போகும் பக்வாந்த் மன்...

பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் கடந்த ஜனவரி 18ம் தேதி பக்வாந்த் மன் அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் கடந்த ஜனவரி 18ம் தேதி பக்வாந்த் மன் அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் கடந்த ஜனவரி 18ம் தேதி பக்வாந்த் மன் அறிவிக்கப்பட்டார்.

    காமெடி நடிகராக வாழ்க்கையை தொடங்கி பஞ்சாபின் முதல்வராகப் போகிறார் ஆம் ஆத்மியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பக்வாந்த் மன்.

    பஞ்சாப் வராற்றில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இங்குள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சி, 90-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கவுள்ளது.

    ஆம் ஆத்மியின் வெற்றியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முதல்வர் வேட்பாளருமான பக்வாந்த் மன்னின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. பஞ்சாபின் சங்ரூர் நாடாளுமன்ற தொகுதியின் ஆம் ஆத்மி உறுப்பினராக பக்வாந்த் மன் உள்ளார். அதே தொகுதியின் சதோஜ் கிராமத்தை சேர்ந்த மன், நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கினார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த பக்வாந்த் மன், 2011-ல் பஞ்சாப் மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார்.

    இதையும் படிங்க - பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி!

    ஆனால் அந்த கட்சி அடுத்து வந்த தேர்தல்களில் தோல்வியை தழுவியது. 2014-ல் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அவருக்கு, சங்ரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தேர்தலில் சிரோன்மணி அகாலிதள கட்சியின் முக்கிய தலைவர் சுக்தேவ் சிங் தின்சாவை தோற்கடித்து, மாநிலம் முழுவதும் பக்வாந்த் மன் கவனம் ஈர்த்தார்.

    இதையும் படிங்க - 5 மாநில தேர்தல்: காங்கிரஸ் வாக்கு சதவீதம் சரிந்தது.. உ.பி.யில் 3% கூட எட்டவில்லை

    பின்னர் 2019 மக்களவை தேர்தலின்போதும் சங்ரூர் தொகுதியில் போட்டியிட்டு மன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் கடந்த ஜனவரி 18-ம்தேதி பக்வாந்த் மன் அறிவிக்கப்பட்டார். அவரது எளிமை, செயல்பாடு உள்ளிட்டவைகளால் ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் வரலாறு காணாத வெற்றியைத் தந்துள்ளனர்.

    பஞ்சாப் காங்கிரசில் உட்கட்சி பூசல், தேர்தல் நேர குளறுபடிகள், முதல்வர் வேட்பாளரை தாமதமாக அறிவித்தது உள்ளிட்டவை அக்கட்சி படுதோல்வியை சந்திக்க காரணமாக கூறப்படுகிறது.

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து தோல்வியை சந்தித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி