Home /News /national /

'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி' : முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிப்பு

'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி' : முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முகமாக இருந்து வந்த கேப்டன் அமரிந்தர் சிங், கடந்த செப்டம்பர் மாதம் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார்.

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முகமாக இருந்து வந்த கேப்டன் அமரிந்தர் சிங், கடந்த செப்டம்பர் மாதம் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார்.

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முகமாக இருந்து வந்த கேப்டன் அமரிந்தர் சிங், கடந்த செப்டம்பர் மாதம் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார்.

    பாஜகவுடன் இணைந்து பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போவதாக, முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதுக்கட்சியை தொடங்கியவருமான் அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமரிந்தர் சிங் கூறியதாவது-

    பாஜக உடன் இணைந்து, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாஜகவை தவிர்த்து எஸ்.ஏ.டி. கட்சியுடன் கூட்டணி அமைக்கிறோம். விரைவில் கூட்டணி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    பஞ்சாப் தேர்தலில், எங்களது கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. நாங்கள் தொடங்கியுள்ள பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட அளவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் மிக எளிதாக எங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ள முடியும்.

    Also Read : அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல்... விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை உயர்த்திய இத்தாலி அரசு

    மத்திய அரசு, தான் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து விட்டது. விவசாயிகள் எதிர்பார்க்கும் மற்ற கோரிக்கைகளையும் பிரதமர் மோடி நிச்சயமாக நிறைவேற்றுவார்.

    பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கை குறித்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் கமிட்டி அமைக்கப்படவுள்ளது. எனவே மத்திய அரசுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Also Read : இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 127.93 கோடியை கடந்தது

    காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முகமாக இருந்து வந்த கேப்டன் அமரிந்தர் சிங், கடந்த செப்டம்பர் மாதம் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார். அவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இதற்கு முடிவு கட்டும் விதமாக காங்கிரஸ் கட்சியின் தலைமை முதல்வர் பொறுப்பிலிருந்து விலகுமாறு அமரிந்திர் சிங்கை கேட்டுக்கொண்டது.

    அவர் பாஜகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் புதுக்கட்சியை அறிவித்தார் இதற்கு பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பி.எல்.சி.) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போவதாக அமரிந்தேர் சிங் அறிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Amarinder Singh, BJP, Punjab

    அடுத்த செய்தி