Home /News /national /

18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் : கெஜ்ரிவால் அறிவிப்பு

18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் : கெஜ்ரிவால் அறிவிப்பு

17 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதள கூட்டணி, ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே பலமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 24 மணி நேர மின்சார வசதி, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, மருந்துகள் வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில் பெண்களுக்கான தொகை என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

    சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தலுக்கான பத்து வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது. 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதள கூட்டணி, ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே பலமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் தீவிர போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த சட்டங்களை ரத்து செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதனால் பஞ்சாபில் பாஜகவுக்கு இருக்கும் எதிர்ப்பலைகள் சற்று குறைந்திருப்பதாக தெரிகிறது.

    2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 77 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதற்கு முன்பாக மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி ஆட்சி 10 ஆண்டுகளாக நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Arvind Kejriwal

    அடுத்த செய்தி