• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காங்கிரஸில் இருந்து விலக முடிவு... பாஜவில் சேரமாட்டேன் - கேப்டன் அமரீந்தர் சிங்

காங்கிரஸில் இருந்து விலக முடிவு... பாஜவில் சேரமாட்டேன் - கேப்டன் அமரீந்தர் சிங்

கேப்டன் அமரீந்தர் சிங்

கேப்டன் அமரீந்தர் சிங்

அமரீந்தர்சிங், அமித்ஷாவை, டெல்லியில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.

  • Share this:
    காங்கிரஸிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர்சிங் தெரிவித்துள்ளார். எனினும், பாஜகவில் இணையும் எண்ணம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

    அடுத்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக அண்மையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாகவும், அமரீந்தர்சிங்கிற்கு எதிராகவும் எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

    மேலும் கட்சியில் தாம் அவமதிக்கப்படுவதாக கூறி, சோனியாகாந்தியின் அறிவுரைப்படி, அமரீந்தர்சிங் முதலமைச்சர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சராக தற்போது பொறுப்பில் உள்ளார். இந்த சூழலில் ராஜினாமா செய்த அமரீந்தர்சிங், அமித்ஷாவை, டெல்லியில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.

    Also Read : ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வரலாறு நீக்கம்; பெரியார், ஜின்னா சேர்ப்பு- கேரளா பல்கலைக்கழகம் அதிரடி

    இதன் மூலம் அமரீந்தர்சிங் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்தன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமரீந்தர்சிங், விவசாயிகள் போராட்டம் குறித்து அமித்ஷாவிடம் பேசியதாகவும், பாஜகவில் இணையும் எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கான கடிதம் விரைவில் அளிக்க உள்ளதாகவும் அமரீந்தர் கூறியுள்ளார். தனது டெல்லி பயணம் அரசியல் சார்ந்தது இல்லை என்றும் அமரீந்தர்சிங் விளக்கமளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: