தள்ளுவண்டியில் முட்டை திருடிய தலைமை காவலர்..வீடியோ வைரலான நிலையில் சஸ்பெண்ட்

முட்டை திருடிய தலைமை காவலர்

விசாரணையில்ஃபதேஹ்கர் சாஹிப் ( Fatehgarh Sahib) காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் பிரித்பால் சிங் என்பவரே முட்டை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

 • Share this:
  பஞ்சாப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து முட்டை திருடிய தலைமை காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  சண்டிகர் அருகே உள்ள ஃபதேஹ்கர் சாஹிப் (Fatehgarh Sahib) பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், சாலையோரம் நின்றிருந்த தள்ளுவண்டியில் இருந்து முட்டைகளை திருடி தனது பேண்ட் பாக்கெட்டில் வைப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

   

      

   

  காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஃபதேஹ்கர் சாஹிப் ( Fatehgarh Sahib) காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் பிரித்பால் சிங் என்பவரே முட்டை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: