Home /News /national /

நடிகர் சோனு சூட் சகோதரிக்காக கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்

நடிகர் சோனு சூட் சகோதரிக்காக கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்

Actor Sonu Sood

Actor Sonu Sood

மோகா தொகுதியைச் சேர்ந்த சோனு சூட்டின் சகோதரி மாளவிகா எதிர்வரும் பஞ்சாப் தேர்தலில் வேட்பாளராக்கப்படுவார் என கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னியும் பேசியிருந்தார்.

    சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த நடிகர் சோனு சூட்டின் தங்கைக்காக தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    பாலிவுட் நடிகர் சோனு சூட் படங்களில் நடித்ததைக் காட்டிலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பல மடங்கு நாடு முழுவதும் அறியப்பட்ட நபராக மாறினார். கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, பேருந்து, ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் தங்கி பணிபுரிந்த புலம்பெயர்ந்த தொழிலாளார்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப பெரிதும் சிரமப்பட்டனர். பலரும் கால்நடையாக நாட்கணக்கில் சாரை சாரையாக சொந்த ஊர்களுக்கு நடைபயணத்தை தொடங்கினர். இப்படிப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்து உதவியவர் தான் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தனது சொந்த பணத்தை செலவிட்டு அவர்களின் துயரை நீக்கினார்.

    Also read:  அகிலேஷ் யாதவுடன் கூட்டணி சேர மறுத்த பிரபல பட்டியலின தலைவர் - உ.பியில் 3வது அணி உருவாகிறதா?

    மேலும் சமூக ஊடகங்கள் வாயிலாக அவருக்கு கிடைத்த கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைத்தார். ஆக்ஸிஜன், படிப்புக்கு உதவி என பல்வேறு உதவிகளையும் அவர் செய்து வந்ததால் சோனு சூட் மீது மக்களின் நன்மதிப்பு பல மடங்கு பெருகியது. இதனிடையே சமீபத்தில் அரசியல் பாதைக்கு செல்ல இருப்பதாக ஒரு ஹிண்ட் கொடுத்தார். இருப்பினும் அவர் கட்சியில் ஏதும் இணையவில்லை. மாறாக அவருடைய சகோதரி மாளவிகா சூட் காங்கிரஸ் கட்சியில் கடந்த வாரம் இணைந்தார். மோகா தொகுதியைச் சேர்ந்த மாளவிகா எதிர்வரும் பஞ்சாப் தேர்தலில் வேட்பாளராக்கப்படுவார் என கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னியும் பேசியிருந்தார்.

    Also read:  கங்கனா ரணாவத்தின் கன்னத்தை விட மென்மையான சாலைகள் அமைப்பேன் என உறுதி கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ - சர்ச்சை வீடியோ

    இந்த நிலையில் மோகா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹர்ஜோத் கமல், சோனு சூட்டின் சகோதரி மாளவிகாவுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். சண்டிகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வருகை தந்த அவர் பாஜக தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Congress, Punjab, Sonu sood

    அடுத்த செய்தி