பஞ்சாப் மாநிலத்தில் ஏப்.30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு

இரவு நேர ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து பஞ்சாபில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தலைநகர் சண்டிகரில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது மாநிலம் முழுவதும் இன்று முதல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில், 80 சதவிகிதம் பேருக்கு இங்கிலாந்தின் மரபு திரிந்த கொரோனா தொற்று ஏற்படுவதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

  இதனிடையே பஞ்சாபில் பாதிக்கப்பட்டோரில் சுமார் 85% அளவுக்கு பிரிட்டன் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வகை கொரோனா அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.

   

  முன்னதாக மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் பெங்களூரு நகர் பகுதியிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
  Published by:Arun
  First published: