Home /News /national /

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி!

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி!

ஆம் ஆத்மி வேட்பாளரிடம் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்கிறார்.

ஆம் ஆத்மி வேட்பாளரிடம் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்கிறார்.

ஆம் ஆத்மி வேட்பாளரிடம் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்கிறார்.

    பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். முதல்வராக இருந்தவர் 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருப்பது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. 5 மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் எழுந்தது. இதில், குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தன.

    இந்நிலையில், 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. தொடக்கத்திலிருந்தே பஞ்சாப் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்க துவங்கியது.

    இதையும் படிங்க:"ஜனநாயகத்தை பாதுகாக்க இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும்"-தேர்தல் முடிவு குறித்து கீ.விரமணி பேட்டி

    117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி 92 இடங்களிலும், ஆளும் காங்கிரஸ் 18 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும், அகாலிதளம் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிப்பது உறுதியானது. பெரும்பான்மைக்கு தேவையான 59 இடங்களை தாண்டி, ஆம் ஆத்மி தனி பெரும் கட்சியாக அங்கு உருவெடுத்துள்ளது.

    முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து பிரச்சினைக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்தது.

    இதையடுத்து, அமரீந்தர் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து,காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். அவரது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து களம் காண்டது.

    இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பட்டியாலா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்ட அமரீந்தர் சிங் எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

    மேலும் படிக்க:5 மாநில சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்.. தமிழகத்தில் பாஜகவினர் கொண்டாட்டம்...

    இதேபோல், ஆம் ஆத்மி வேட்பாளரிடம் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்கிறார். பாதார், சாம்கவுர் சாகேப் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தோல்வியடைந்தார்.

    பாதார் தொகுதியில் 30,519 வாக்குகள் வித்தியாசத்தில் சரண்ஜித் சிங் சன்னி தோல்வியை தழுவினார். பாதார் தொகுதியில் ஆம் ஆத்மியை சேர்ந்த லப்சிங் குகோக் 52,357 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதேபோல், சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட சாம்கவுர் சாகேப் தொகுதியிலும் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சாம்கவுர் சாகேப் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் 54,772 வாக்கும், சரண்ஜித் சிங் சன்னி  50,050 வாக்கும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, Election 2022, Punjab

    அடுத்த செய்தி