Home /News /national /

வீட்டிற்கு வெளியே குப்பை.. பஞ்சாப் முதலமைச்சர் வீட்டிற்கு ரூ.10,000 அபராதம் விதித்த மாநகராட்சி

வீட்டிற்கு வெளியே குப்பை.. பஞ்சாப் முதலமைச்சர் வீட்டிற்கு ரூ.10,000 அபராதம் விதித்த மாநகராட்சி

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்

Punjab CM Fined: பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த பான் வீட்டிற்கு பாஜகவைச் சேர்ந்த சண்டிகர் மாநகராட்சி கவுன்சிலர் மகேஷ்சின்தர் சிங் சித்து ரூ.10,000 அபராதம் விதித்துள்ளார்.

    வீட்டுக்கு வெளியே குப்பைகள் கொட்டி வைப்பதாக மக்கள் தொடர்ந்து புகார் அளித்ததன் பேரில் பஞ்சாப் மாநில முதலமைச்சரின் இல்லத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக பகவந்த் மான் முதலமைச்சராக உள்ளார்.  பஞ்சாப் மற்றும் அதன் அண்டை மாநிலமான ஹரியானாவிற்கு சண்டிகர் பொது தலைநகராக இருந்து வருகிறது. பொதுத் தலைநகரான சண்டிகர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியான ஆளுநரின் கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமாக இருந்து வருகிறது.

    இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகர் என்பதால் இரு மாநில முதலமைச்சர்களின் இல்லம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் வசிப்பிடங்களும் சண்டிகரில் உள்ளன.யூனியன் பிரதேசமாக இருந்தாலும் சண்டிகர் மாநகராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு மேயர் கவுன்சிலர் போன்றோர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியும், ஹரியானாவில் பாஜகவின் கூட்டணி ஆட்சியும் உள்ள நிலையில், சண்டிகர் உள்ளாட்சி அமைப்பில் பாஜக, ஆம் ஆத்மி சம பலத்துடன் உள்ளது. இந்நிலையில்,வீட்டிற்கு வெளியே குப்பைகளை கொட்டி வைத்த காரணத்திற்காக சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதலமைச்சர் வீட்டிற்கு பாஜகவைச் சேர்ந்த சண்டிகர் மாநகராட்சி கவுன்சிலர் மகேஷ்சின்தர் சிங் சித்து ரூ.10,000 அபராதம் விதித்துள்ளார்.

    இது தொடர்பாக கவுன்சிலர் மகேஷ்சிந்தர் சிங் கூறுகையில், செக்டார் 2 பகுதியில் உள்ள வீடுகள் எண் 6,7,44,45 ஆகியவற்றின் மீது அப்பகுதி வாசிகள் தொடர் புகார்களை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சரின் வீடும் இதில் அடக்கம். பல முறை எச்சரித்தும் முதலமைச்சர் வீட்டின் ஊழியர்கள் குப்பை கொட்டுவதை நிறுத்தவில்லை. எனவே தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு முதலமைச்சர் தான் உரிய பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ரெய்டில் கட்டுக்காட்டாய் சிக்கிய பணம் - அடுத்த நாளே அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை

    இந்த புகாருக்கு பஞ்சாப் முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் முதலமைச்சரின் பாதுகாப்பு படையினர் தான் இருப்பதாகவும் இதற்கும் முதலமைச்சருக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறி புகாரை மறுத்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Aam Aadmi Party, Punjab

    அடுத்த செய்தி