காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்! பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு

இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எளிதாக எடுத்துக் கொள்ளாது. இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் ஒன்றை செய்ய முயற்சி செய்யும்.

news18
Updated: August 5, 2019, 6:01 PM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்! பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு
அம்ரீந்தர் சிங்
news18
Updated: August 5, 2019, 6:01 PM IST
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம் மற்றும் கொண்டாட்டத்துக்கு பஞ்சாப் அரசு தடை விதித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநிலம் முழுவதையும் கடந்த இரு தினங்களுக்கு முன்னரே ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்தநிலையில், 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கைவிடுத்திருந்தது. இந்தநிலையில், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாடு இரண்டுக்கு அண்டை மாநிலமான பஞ்சாபில் 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் ஆலோசனை நடத்தினார்.


அந்தக் கூட்டத்தில் பேசிய அம்ரீந்தர் சிங், ‘இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எளிதாக எடுத்துக் கொள்ளாது. இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் ஒன்றை செய்ய முயற்சி செய்யும்’ என்று பேசினார். மேலும், மாநிலம் முழுவதுமுள்ள 8,000 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பார்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இணை காவல் ஆணையாளர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து பேசுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்கு ஆதரவான கொண்டாட்டத்தையோ, எதிராக போராட்டமோ நடத்த அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Also see:

Loading...

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...