முன்னாள் காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக பெற்றோருடன் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா: புனே மாவட்டத்தில் வேறு பெண்ணை திருமணம் செய்து தனது முன்னாள் காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக 23 வயது இளைஞர் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உயிரிழந்த பெண்ணின் 60 வயது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தந்தை கூறுகையில், வேறு பெண்ணை திருமணம் செய்து தனது மகளை ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டியதால் அந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என கூறினார்.
Also Read |
சுதந்திர தினத்தன்று சாலையில் கொலை செய்யப்பட்ட மாணவி- சிசிடிவியால் சிக்கிய குற்றவாளி!
இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் ஹவேலியின் வாட்கி பகுதியில் உள்ள பன்மலாவைச் சேர்ந்த நபர் என்பதும் அவரது 64 வயது தந்தை மற்றும் 54 வயது தாயுடன் அங்கு வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், இளைஞரின் காதலி ஆகஸ்ட் 17ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அந்த இளைஞரின் பெற்றோருக்கு தனது மகனின் காதல் விவகாரம் குறித்து ஏற்கெனவே தெரியும் என்றும், அவ்வாறு தெரிந்துகொண்டே தங்கள் மகனை வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர் என்றும், இதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவிக்காதது அந்த பெண்ணின் தற்கொலைக்கு காரணம் எனவும் கூறியுள்ளனர். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), ஐபிசி 34 ஆகிய பிரிவுகளின் கீழ் ஹடப்சர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.