சாமியார் பேச்சைக்கேட்டு மனைவியை நிர்வாணப்படுத்தி பூஜை.. சிக்கிய கணவர் குடும்பத்தினர்..

மாதிரி படம்

ஆண் குழந்தை வேண்டும் என்பதால் மனைவியை சாமியாரிடம் அழைத்துச் சென்ற கணவர் குடும்பத்தினர், நிர்வாணமாக்கி அவருக்கு சாம்பல் பூஜை நடத்தியிருக்கின்றனர்.

  • Share this:
மூட நம்பிக்கைகளின் உச்சமாக ஆண் குழந்தை வேண்டும் என்ற நோக்கத்தில் மனைவியை சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்ற கணவர் குடும்பத்தினர்,அங்கு அப்பெண்ணை சாம்பல் திண்ண வைத்து கொடுமைப்படுத்தியதுடன், நிர்வாணமாக்கி அவருக்கு சாம்பல் பூஜையும் செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் சமுதாயத்தில் இன்னமும் சிலரால் மூட பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நரபலி போன்ற அசம்பாவித சம்பவங்களும் அவ்வப்போது வெளியுலகுக்கு தெரியவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பல ஆண்டுகளாக ஆண் குழந்தை இல்லாத நிலையில் ஆண் குழந்தை வேண்டி மனைவியை சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்ற கணவரும், அவரது தாயாரும் செய்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் காவல்நிலையத்தில் புகாராக அளித்ததன் மூலம் அவருக்கு நடந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி சின்வாட் பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் சக்கன் காவல்நிலையத்தில் தனது கணவர், மாமியார் மற்றும் சாமியார் ஒருவர் மீது பரபரப்பு புகாரை அளித்திருக்கிறார்.

அவர் அளித்திருக்கும் புகாரின்படி, அவருக்கும் அவருடைய கணவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து பெண் குழந்தை இருப்பதாகவும், ஆனாலும் ஆண் குழந்தை இல்லை என்பதால் தன்னை பல ஆண்டுகளாக இருவரும் சித்ரவதை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read:  17 வயது தங்கச்சி, அப்பா, அம்மா, பாட்டி கொடூர கொலை – 20 வயது கல்லூரி மாணவர் வெறிச்செயல்

4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண் குழந்தை பிறக்காததால் சாமியார் ஒருவரிடம் கணவரும் மாமியாரும் அழைத்துச் சென்ற போது, அந்த சாமியார் சாம்பலை சாப்பிட வைத்ததாகவும் கொஞ்சம் சாம்பலை வீட்டுக்கு கொடுத்தனுப்பி நிர்வாணப்படுத்தி சாம்பல் பூஜை நடத்துமாறு கூறியதாகவும் இப்படி செய்வதால் ஆண் குழந்தை பிறக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த பின்னர் கணவரும், மாமியாரும் என்னை நிர்வாணப்படுத்தி சாம்பலையும், குங்குமத்தையும் உடம் முழுக்க பூசிவிட்டனர்.

Also Read:  7 மாத கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் துடிதுடிக்க கொலை செய்த கணவர்!

என்னிடம் வரதட்டனை கேட்டு சில மாதங்கள் என் தாய் வீட்டுக்கு விரட்டியடித்தனர். இதெல்லாம் போதாது என என் அனுமதி இல்லாமலே ஆண் குழந்தை இல்லை என்பதற்காக வேறு ஒரு பெண்ணையும் என் கணவர் ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார் என அப்பெண் கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து கணவர், அவரின் தாயார் மற்றும் சம்பந்தப்பட்ட சாமியார் ஆகியோர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: