ஹோம் /நியூஸ் /இந்தியா /

சகோதரருக்கு வெளிநாட்டு வேலை வாங்கித்தரும் ஆசையில் 8.20 லட்சம் ரூபாய் இழந்த பெண்!

சகோதரருக்கு வெளிநாட்டு வேலை வாங்கித்தரும் ஆசையில் 8.20 லட்சம் ரூபாய் இழந்த பெண்!

2019-ல் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது, ஸ்காட்டிஷ் சேல்ஸ்மேன் நிறுவனத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், ஸ்காட்லாந்தில் வேலை கிடைக்க உதவுவதாகவும் ஷர்மா கூறியதாக தெரிகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Maharashtra, India

  மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 23 வயது பெண் ஒருவர் தனது சகோதரருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடிய போது மோசடி கும்பலிடம் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஸ்காட்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த ஒருவருடன் புகார்தாரரான இப்பெண் தொடர்பு கொண்ட போது ரூ. 8.20 லட்சம் ஏமாற்றப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் மும்பையைச் சேர்ந்த ராஜீவ் ஷர்மா என்ற சத்னம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  இப்பெண் அளித்த போலீஸ் புகாரின்படி, செப்டம்பர் 2019-ல் ரயில் பயணத்தின் போது குற்றம் சாட்டப்பட்ட நபருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு வெளிநாடுகளில் தொடர்பு இருப்பதாக ராஜீவ் ஷர்மா கூறியதை அப்பெண் நம்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர், 23 வயதான அப்பெண், வெளிநாட்டில் வேலை தேடும் தனது சகோதரரை ராஜீவ் ஷர்மாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

  2019-ல் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது, ஸ்காட்டிஷ் சேல்ஸ்மேன் நிறுவனத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், ஸ்காட்லாந்தில் வேலை கிடைக்க உதவுவதாகவும், அதற்காக பணம் தேவைப்படுவதாகவும் ஷர்மா இவர்களிடம் கூறியுள்ளார். புனே பெண்ணும் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட ராஜீவ் ஷர்மாவின் கணக்கிற்கு 8.20 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

  பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரருக்கு வேலை ஏற்பாடு செய்ய முடியவில்லை எனக் கூறிவிட்டு பணத்தைத் திருப்பிச் செலுத்த மறுத்து, அவரது செல்போனை அணைத்துவிட்டதால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

  குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் ஷர்மா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற செயலில் ஈடுபடுதல்) மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் பிற பிரிவுகளின் கீழ் சங்வி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Published by:Archana R
  First published:

  Tags: Crime News, Mumbai, Pune