எங்கிட்ட சொல்லாம பானிபூரி வாங்கலாமா? - மனைவி செய்த பகீர் சம்பவம்!

Pani poori stall

என்னிடம் சொல்லாமல் ஏன் பானிபூரி வாங்கினீர்கள் நான் இரவு உணவு சமைத்துவிட்டேன் என கேட்டு மனைவி தகராறில் ஈடுபட இருவருக்கும் இடையே பிரச்னை உருவெடுத்தது.

  • Share this:
கணவர் பானிபூரி வாங்கி வந்ததால் விரக்தியடைந்த மனைவி தற்கொலை செய்து உயிரிழந்ததால் ஒரு குடும்பமே நிர்மூல கதியை அடைந்த அவலம் ஏற்பட்டிருக்கிறது.

கணவன் - மனைவி இருவருக்குமிடையிலான பிரச்னைகள், சண்டை சச்சரவுகள் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலுமே நீரு பூத்த நெருப்பாக கழன்று கொண்டிருக்கக் கூடியது தான். என்றாலும் சில நேரங்களில் ஏற்படும் சிறிய பிரச்னைகளுக்காக கோவம் தலைக்கேறி சரிசெய்ய இயலாத வகையிலான காரியங்கள் ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கை பாதையே மாறிவிடும் அளவுக்கு சென்று விடுகிறது.

கணவர் மனைவிக்கு இடையிலான ஒன்றுமே இல்லாத சிறிய பிரச்னை ஒன்று வாழ்க்கை பாதையையே மாற்றியிருக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் அம்பேகன் பகுதியைச் சேர்ந்த 33 வயதாகும் ககினிநாத் சர்வடே என்பவருக்கும், 23 வயதாகும் பிரதிக்‌ஷா சர்வடே என்ற பெண்ணுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் அவ்வப்போது குடும்ப சண்டைகள் ஏற்பட்டு வந்திருக்கிறது. இது இருவருக்குமே வாடிக்கையாக நடக்கும் நிகழ்வாகவே இருந்து வந்திருக்கிறது.

Also read:   சாமியார் பேச்சைக்கேட்டு மனைவியை நிர்வானப்படுத்தி சாம்பல் பூஜை.. சிக்கிய கணவர் குடும்பத்தினர்..

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவில் கணவர் ககினிநாத், தனது மனைவிக்கு சொல்லாமல் பானிபூரி வாங்கி வந்திருக்கிறார். ஆனால் தன்னிடம் சொல்லாமல் ஏன் பானிபூரி வாங்கினீர்கள் நான் இரவு உணவு சமைத்துவிட்டேன் என கேட்டு மனைவி தகராறில் ஈடுபட இருவருக்கும் இடையே பிரச்னை உருவெடுத்தது.

இதைத்தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த பிரதிக்‌ஷா, மறுநாள் சனிக்கிழமையன்று விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்று ஞாயிற்றுக்கிழமையன்று பிரதிக்‌ஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

Also read:   7 மாத கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் துடிதுடிக்க கொலை செய்த கணவர்!

இதனையடுத்து பிரதிக்ஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறிய விஷயம் ஒன்றில் ஆரம்பித்த சண்டை உயிரிழப்பு வரை சென்றது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: