• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெண்ணின் அலரல் சத்தத்தால் பதறிய பகுதிவாசிகள் - 4 பேர் செய்த கொடூரம்!

பெண்ணின் அலரல் சத்தத்தால் பதறிய பகுதிவாசிகள் - 4 பேர் செய்த கொடூரம்!

rape

rape

பூட்டிய அறைக்குள் இருந்து அலரல் சத்தம் வந்தது. கதவைத் திறக்குமாறு அவர்கள் சத்தமிட்டு கதவு திறக்கபடாததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

  • Share this:
புனேவில் பூட்டிய அறைக்குள் வைத்து பெண் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் 22 வயதான எம்.பி.ஏ மாணவி ஒருவர் தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: 5 சிறுமிகள்.. தாய்.. சித்தி… யாரையும் விட்டுவைக்காத பாலியல் அரக்கன்!

மகாராஷ்டிர மாநில புனேவின் ஜந்தா வசாஹத் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவரின் அலரல் சத்தம் கேட்டு அப்பகுதி வாசிகள் திகைப்படைந்தனர். அங்கு கூடிய பகுதிவாசிகள் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு தொலைபேசியில் அளித்த தகவலின் பேரில் தட்டவாடி காவல்நிலையத்திலிருந்து காவல் ரோந்து படையினர் வந்தனர்.

பின்னர் காவல்துறையினர் அந்த பெண்ணின் அலரல் சத்தத்தை கேட்டனர். பூட்டிய அறைக்குள் இருந்து அலரல் சத்தம் வந்தது. கதவைத் திறக்குமாறு அவர்கள் சத்தமிட்டு கதவு திறக்கபடாததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது நால்வர் சேர்ந்து ஒரு இளம் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டிருப்பதை பார்த்து அப்பெண்ணை மீட்டு அந்த நால்வரையும் கைது செய்தனர்.

Also Read:  தேசிய விளையாட்டு தினம் : அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லக்கூடிய 5 இளம் வீரர்கள்!

அங்கு என்ன நடந்தது என்பதை கூற முடியாத நிலையில் அந்த பெண் மிகவும் அதிர்ச்சியுடன் இருந்தார். ஆனால் அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

சம்பவத்தன்று மாலை நான்கு பேரில் ஒருவர் பேருந்து நிலையத்தில் இருந்து அப்பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்று ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்து அவனது நண்பர்கள் மூவரை வரச் செய்து அங்கு பூட்டி வைத்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். இதில் தொடர்புடைய ஒருவன் கிரிமினல் பின்னணி கொண்டவன் என்பது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: