• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாலியல் தொழில் தொடர்பாக திருநங்கைகள் இடையே போட்டி: அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

பாலியல் தொழில் தொடர்பாக திருநங்கைகள் இடையே போட்டி: அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

திருநங்கை கொலை

திருநங்கை கொலை

பண்டி மாருதி பந்தேவாட் தனது வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டார் என்றும் இதனால் வருமானம் குறைந்துவிட்டது என்றும் வருத்தத்தில் காஜல் இருந்து வந்துள்ளார். இதனால் பண்டி மாருதி பந்தேவாட்டை  காஜல் கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

  • Share this:
    புனேவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த திருநங்கை ஒருவர்,  தனது வாடிக்கையாளர்களை கவர்ந்துகொண்டதால் சக திருநங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் ஹாவேலிபகுதியைச் சேர்ந்தவர் பண்டி மாருதி பந்தேவாட் என்கிற மகர்த்வாஜ். இதேபோல், தேயூரில் வசிப்பவர் காஜல் என்கிற கேசவ் உமாஜி சவான். திருநங்கைகளான இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    பண்டி மாருதி பந்தேவாட் தனது வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டார் என்றும் இதனால் தனது வருமானம் குறைந்துவிட்டது என்றும் வருத்தத்தில் காஜல் இருந்து வந்துள்ளார். இந்த வருத்தம் ஒருகட்டத்தில் வெறுப்பாக மாறி பண்டி மாருதி பந்தேவாட்டை  காஜல் கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பண்டி மாருதி பந்தேவாட் சகோதரர் அளித்த புகாரின் பேரில் காஜலை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர், 5 நாட்கள் போலீஸ் காவலில் உள்ளார்.

    இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் யாவத் காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் கேசவ் வபிள் கூறுகையில், இறந்துபோனவர்  அகமத்பூரின் லத்தூர் பகுதியை சேர்ந்தவர். அவர் திருநங்கை என்று யாருக்கும் தெரியாது. லத்தூரில் ஆணாகவும் தேயூரில் பெண்ணாகவும் அவர் இருந்து வந்துள்ளார். செடிகொடிகள் அடர்ந்த வனத்துறையின் நிலத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு... திரிணாமுல் காங்கிரஸில் சேர முடிவு? சுப்பிரமணியன் சுவாமி பதில் என்ன?


    அதன்பிறகு, நாங்கள் சிசிடிவியை சரிபார்த்தோம், மேலும் சில தெரிந்த கூட்டாளிகளைக் கண்டுபிடித்தோம் மற்றும் சுமார் 50 திருநங்கைகளை விசாரித்தோம், அவர்களில் காஜல் இறந்தவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது தெரியவந்தது. அவரது உடலில் காயங்களும் இருந்தன. அவரை கைது செய்து விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    மேலும் படிங்க: போதைப்பொருள் விற்பனை: அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: