• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புனேவில் ஒரு மணிநேரத்தில் 4 கிலோ அசைவ ரெசிபிக்கள் சாப்பிட்டால் புல்லட் பைக் பரிசு!

புனேவில் ஒரு மணிநேரத்தில் 4 கிலோ அசைவ ரெசிபிக்கள் சாப்பிட்டால் புல்லட் பைக் பரிசு!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியா டுடேவிடம் பதில் அளித்த சிவ்ராஜ் ஹோட்டலின் உரிமையாளர் அதுல் வைகர், வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்க்க இத்தகைய புது முயற்சியை எடுத்ததாகவும், உணவு உண்ணும் போட்டிக்கு வரவேற்பு சிறப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
    புனேவில் உள்ள ஒரு உணவகம் வாடிக்கையாளர்களை ஈர்க்க தனித்துவமான உணவு உண்ணும் போட்டியை அறிந்துள்ளது தற்போது பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் களையிழந்ததால்பு னேவின் புறநகரில் உள்ள வாட்கான் மாவல் பகுதியில் அமைந்துள்ள சிவ்ராஜ் ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது 'வின் எ புல்லட் பைக்' (Win a bullet bike) என்ற உணவு உண்ணும் போட்டியை அறிவித்துள்ளது. இந்த அசைவ உணவு போட்டியை 60 நிமிடங்களுக்குள் நிறைவு செய்பவர்களுக்கு ரூ .1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசாக வழங்கப்படும். ஆனால் அது அவ்வளவு சாதாரணமானது என்றும் கூறிவிட முடியாது. இந்த போட்டியில் வெற்றிபெற சுமார் 12 வகையான அசைவ உணவு வகைகளை 60 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விட வேண்டும். 

    மேலும் இதில் வழங்கும் உணவு வகைகள் - வறுத்த மீன்கள், வறுத்த சுர்மாய், பொம்ஃப்ரேட் வறுத்த மீன், சிக்கன் தந்தூரி, மட்டன் வறுவல், சிக்கன் மசாலா மற்றும் இறால் பிரியாணி ஆகியவை அடங்கும். இந்த பாரம்பரிய உணவின் அனைத்து உணவு ரெசிபிகளையும் தயாரிக்க 55 பேர் ஒன்றாக சேர்ந்து சமைத்துள்ளனர். இதன் ஒரு பிளேட் (‘புல்லட் தாலி’) விலை ரூ .2,500 ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக ஐந்து புத்தம் புதிய ராயல் என்ஃபீல்ட் பைக்குகளை உணவகத்தின் வராண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

    மேலும் இந்த போட்டியின் வழிமுறைகள், கூடுதல் விவரங்கள் அடங்கிய விவரங்கள் பதாகைகள் மற்றும் மெனு கார்டுகளில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாடிக்கையாளர்களை உணவகத்திற்கு வரவழைக்க இதுபோன்ற ஒரு தனித்துவமான போட்டியை தொடங்குவதற்கான யோசனை அந்த உணவக உரிமையாளருக்கு எப்படி தோன்றியது? என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றியது. 

    Also read... டிரம்புக்கு எதிரான தடையை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவிப்பு!

    இதற்கு இந்தியா டுடேவிடம் பதில் அளித்த சிவ்ராஜ் ஹோட்டலின் உரிமையாளர் அதுல் வைகர், வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்க்க இத்தகைய புது முயற்சியை எடுத்ததாகவும், உணவு உண்ணும் போட்டிக்கு வரவேற்பு சிறப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார். 

    மேலும் இந்த போட்டியில் பங்கேற்கவும், முயற்சி செய்யவும் பலர் உணவகத்திற்கு வருகை தருகின்றனர். எனவே கொரோனா காலத்தில் வடிக்கையாளர்களின் நலன் கருதி சமூக இடைவெளி பின்பற்றி அனைவரும் அனுமதிக்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த போட்டியை அறிவித்த பின்னர் சிவ்ராஜ் ஹோட்டலில் தினமும் சுமார் 65 பிளேட் உணவுகள் விற்பனையாவதாக அதுல் வைகர் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். மேலும் இதுவரை நடைபெற்ற போட்டியில் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சோம்நாத் பவார் என்பவர் இதில் வெற்றி பெற்று ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை பரிசாக வென்றுள்ளதாக அதுல் வைகர் தெரிவித்துள்ளார். 



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: