பூனே ரயில் பாதையில் ரயில் மீது கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ரயில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாட்ஸ்பாட்களில் ரயில் பாதையின் இருபுறமும் மதில் சுவர் அமைக்க ரயில்வே திட்டமிட்டு முதற்கட்ட பணியைத் தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், பூனே ரயில்வே கோட்டத்தில் கல் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2022 இல் மட்டும் மொத்தம் 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் இடங்களாக ரயில்வே பாதுகாப்புப் படையால் (ஆர்பிஎஃப்) அடையாளம் காணப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 கிலோமீட்டர் நீளத்துக்கு சுவர் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
மத்திய ரயில்வேயின் (CR) பூனே பிரிவில் மூன்று வழிகள் உள்ளன. பூனே முதல் லோனாவாலா, பூனே முதல் மிராஜ் மற்றும் பூனே முதல் டான்ட் வரை என 200க்கும் மேற்பட்ட லோக்கல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் ஹாட்ஸ்பாட்களாக லோனாவாலா வழித்தடத்தில் அடிக்கடி கல் வீசும் இடங்கள் தலேகான், பிம்ப்ரி-சின்ச்வாட், காசர்வாடி, அகுர்டி மற்றும் சிவாஜிநகர் ஆகும், அதே சமயம் டவுண்ட் பாதையில் உள்ளவை கோர்பாடி, லோனி, மஞ்சரி, உருலி, யாவத் மற்றும் காரத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவங்கள் முக்கியமாக குடிசைப் பகுதிகளில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடதக்கது.
2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 15 கல் வீச்சு சம்பவங்கள் நடந்ததால், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டது. இது தொடர்பாக 13 பேர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறார்களாக காணப்படுகின்றனர்.
கல் வீச்சில் ஈடுபடுபவர்கள் பொதுவாக ரயில்வே சட்டத்தின் 145 மற்றும் 154 பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டாலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சுவர் எழுப்பும் பணி தொடங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.