Home /News /national /

பிரசவ வலியால் துடித்தபோதும் பேய் ஓட்டும் சடங்குகள் செய்த கொடூர குடும்பம். கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு.. கணவர் உட்பட 4 பேர் கைது..

பிரசவ வலியால் துடித்தபோதும் பேய் ஓட்டும் சடங்குகள் செய்த கொடூர குடும்பம். கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு.. கணவர் உட்பட 4 பேர் கைது..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புனேவில் பேயோட்டும் சடங்கு செய்ததில் உடல்நலம் சரியில்லாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்

நாட்டில் மூட நம்பிக்கைகள் மறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புனேவில் பேயோட்டும் சடங்கு செய்ததில் உடல்நலம் சரியில்லாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தனது 23 வயதான கர்ப்பிணி மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போதிலும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பேயோட்டுதல் சடங்குகளை செய்த கணவன் மற்றும் கர்ப்பிணியின் பெற்றோர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாக புனே போலீசார் கடந்த பிப்.22-ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பிப்ரவரி 10-ஆம் தேதி லோனாவாலாவில் உள்ள ஷிலிம் எனும் பகுதியில் நடந்துள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி, மகாராஷ்டிரா தடுப்பு, மனித தியாகம் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள், பிளாக் மேஜிக் சட்டம் 2013 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லோனாவாலா கிராமப்புற போலீஸ் நிலைய அதிகாரி கூறியதாவது, " 8 மாத கர்ப்பிணி தீபாலி பிட்கர் என்னும் பெண். இவருக்கு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி பிரசவ வலி ஏற்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும், அவரது கணவர் மகேஷ் பிட்கர், அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி, தீபாலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அதற்கு பதிலாக அவருக்கு வீட்டிலேயே சில சடங்குகளை செய்துள்ளனர்.

மேலும் படிக்கசித்தூர் நரபலி சம்பவம்: ’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் உள்ளது’ - கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த பேராசிரியர்..

அந்த சமயம், திபாலியின் உறவினர் ஒருவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்திய போது, அவரது கணவரும் பெற்றோரும் தீபாலி ஒரு ஆவிக்கு உட்பட்டவர் என்றும், கடவுளால் பேயோட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பின்னர் திபாலியின் நிலைமை மோசமடைந்ததை அடுத்து அந்த உறவினர் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி தீபாலியும் அவருக்கு பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர்.

இதையடுத்து தீபாலியின் உறவினர் அந்தாஷ்ரதா நிர்முலன் சமிதியை அணுகிய பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது" என்று கூறியுள்ளார். எவ்வளவோ தொழில் நுட்பங்களும், வசதிகளும் வந்தபோதிலும் சில மக்கள் இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனையை தருகிறது. இதேபோன்ற சம்பவம் கடந்த ஜனவரி மாதம் ஆந்திராவில் நடந்தது. ஆந்திரபிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி துணை முதல்வர் வி.புருசோத்தம் நாயுடு மற்றும் பள்ளி முதல்வரான அவரது மனைவி பத்மஜா, தமது 2 மகள்களை நரபலி கொடுத்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், அதீத மூடநம்பிக்கையும், மிதமிஞ்சிய பக்தியும் அந்த தம்பதியினரிடையே காணப்பட்டது. மேலும் தங்கள் மகள்களின் உடம்பில் தீயஆவிகள் குடிகொண்டிருக்கின்றன. மரணத்துக்குப் பின் அவர்கள் தீய ஆவிகளிடம் இருந்து விடுபட்டு அவர்கள் புதிதாக உயிர்பெறுவார்கள் என்ற மாயையான நம்பிக்கை அந்தப் பெற்றோரிடம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Gunavathy
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Girl Murder, Pregnancy, Pune

அடுத்த செய்தி