• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மனநல பாதிப்பில் இருந்து மீண்ட பெண்களுக்கு அழகு பயிற்சிகள் மூலம் மறுவாழ்வு அளித்துவரும் மருத்துவமனை!

மனநல பாதிப்பில் இருந்து மீண்ட பெண்களுக்கு அழகு பயிற்சிகள் மூலம் மறுவாழ்வு அளித்துவரும் மருத்துவமனை!

மருத்துவமனையில் சுமார் 1,055 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 496 பெண்கள் உள்ளனர். இருப்பினும், குணமடைந்த பல நோயாளிகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு திரும்பி செல்ல குடும்பம் என யாரும் இல்லை. எனவே அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தரும் வகையில் இந்த பியூட்டி பயிற்சிங்களை வழங்க முடிவெடுத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புனே மாநிலத்தில் உள்ள யராவாடா பகுதியில் அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் பிராந்திய மனநல மருத்துவமனை, குணமடைந்த பெண்களுக்காக அழகு பயிற்சியை வழங்கி வருகிறது. புருவங்களை த்ரெட்டிங் செய்வதிலிருந்து முடி வெட்டுவது வரை பல பியூட்டி பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவமனை வளாகத்தின் பெண்கள் பிரிவில் ஒரு பியூட்டி பார்லர்  அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, மனநோயிலிருந்து மீண்ட மூன்று பெண்களுக்கு பியூட்டி பயிற்சிகளை வழங்கி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பியூட்டி பார்லர் பாடநெறியை நடத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களான யஷஸ்வி சமாஜிக் சன்ஸ்தா மற்றும் சரிகா மோர் ஆகியோரை  மருத்துவமனை இணைத்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் மனநல மருத்துவமனையில் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தது. மனநலம் பாதித்த நபர்களை ஊக்குவிக்க வழங்கப்பட்டு வந்த பயிற்சிகளான காகித பை தயாரித்தல், தையல் பயிற்சி மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை தயாரித்தல் போன்ற தொழில்சார் சிகிச்சை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

மேலும், இது குறித்து பிராந்திய மனநல மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் கீதா குல்கர்னி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “ஒரு பைலட் திட்டமாக நாங்கள் இப்போது பியூட்டீசியன் பாடநெறி பயிற்சிகளை குணமடைந்த பெண்களுக்கு வழங்கி வருகிறோம். ஆரம்பத்தில் இந்த பயிற்சிகள் மூன்று பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. மூன்று பெரும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்கள் குறித்து எந்த தகவலும் தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை, ” என்று கூறினார்.

Also read... மாணவர்களின் நியாபக சக்தியை அதிகரிக்க டியூசன் ஆசிரியர் செய்த விபரீத செயல்!

இதனை தொடர்ந்து பேசிய மனநல மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அபிஜீத் ஃபட்னிஸ், "கொரோனா காலம் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஆனால் எங்கள் நோயாளிகள் சமூக தொலைதூர பயிற்சி மற்றும் முகக்கவசங்கள் அணிவதை உறுதிசெய்ய ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்தோம். எங்கள் மருத்துவமனையில் பத்துக்கும் குறைவாக கொரோனா பாதிப்புகள் இருந்த போதிலும், மறுவாழ்வு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

மருத்துவமனையில் சுமார் 1,055 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 496 பெண்கள் உள்ளனர். இருப்பினும், குணமடைந்த பல நோயாளிகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு திரும்பி செல்ல குடும்பம் என யாரும் இல்லை. எனவே அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தரும் வகையில் இந்த பியூட்டி பயிற்சிங்களை வழங்க முடிவெடுத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றொரு தன்னார்வ தொண்டு நிறுவனமான பாபு டிரஸ்டின் உதவியுடன், மருத்துவமனை சமீபத்தில் ஏழு பெண்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது. பிராந்திய மனநல மருத்துவமனை வளாகத்திற்குள் வசிக்கும் மீட்கப்பட்ட பெண்களுக்கு ஒரு பாதையை உருவாக்க ‘வீட்டுக்குச் செல்லும் திட்டம்’ என்ற ஒரு முன்முயற்சியை கையில் எடுத்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: