ஆத்திரத்தில் தகராறில் ஈடுபட்ட மனைவியை கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்த லிப்ட் குழாய் வழியாக கணவர் தள்ளிவிட்டதில் மனைவிக்கு முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மனைவியை தள்ளிவிட்ட கணவரை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புனேவின் கோந்த்வா புத்குக் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கக்தே வஸ்தி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டராக வேலை பார்த்து வருபவர் நிதின் (வயது 32). இவர் 25 வயதாகும் தனது மனைவியுடன் அங்கு வசித்து வேலை பார்த்து வந்தார். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப விஷயமாக தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை எழுந்தது. இதன் காரணமாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நான்காவது மாடியில் இருந்து மனைவியை லிப்ட் குழாய் வழியாக தள்ளிவிட்டிருக்கிறார்.
Also read: காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பிடித்த பிரபலம் பாஜகவில் இணைந்தார்!!
4வது மாடியில் இருந்து விழுந்தவர் மண் குவியல் மீது வந்து விழுந்து அடிபட்டதில், அவருடைய முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு அருகாமையில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜனவரி 23ம் தேதி காலை மருத்துவமனையில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் கூறப்படவே மனைவியை 4வது மாடியில் இருந்து தள்ளிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.